Go to ...
RSS Feed

இந்தியா

மத்திய அமைச்சர் கிருஷ்ணராஜ் உட்பட உத்தரபிரதேசத்தில் 6 எம்.பி.க்களை கழற்றிவிட்ட பாஜக

உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட 6 எம்.பி.க்களுக்குப் பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக நேற்றுமுன்தினம் வெளியிட்டது. அதில் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், தலைநகர் லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். தன்னை வேட்பாளராக அறிவித்ததற்கு பிரதமர்

பவார், மாயாவதியால் மோடியின் வெற்றி எளிதாகி உள்ளது: சிவசேனா கருத்து

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இந்த முறை பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பார்கள் என பரவலாக பேசப்பட்டது. இதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது திடீரென மக்களவைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடவில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். இது அவர்களின் தோல்வி பயத்தையே வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த அறிவிப்பானது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் 

ராஜஸ்தான் மக்களவைத் தேர்தலில் 14 பாஜக எம்.பி.க்களுக்கு மீண்டும் ’சீட்’

ராஜஸ்தான் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் 14 எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி 20 மாநிலங்களைச் சேர்ந்த 184 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் 14 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான்

முதல்வர் பதவியில் தொடர்வதற்காக பாஜக தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கியதாக எடியூரப்பா மீது புகார்

கர்நாடகாவில் முதல்வர் பதவியில் தொடர்வதற்காக எடியூரப்பா பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு ரூ.1800 கோடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அளித்த ரகசிய டைரி ஒன்றை அடிப்படையாக வைத்து ‘தி கேரவன்’ பத்திரிகை நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ”கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா 2009 காலக்கட்டத்தில் தான் முதல்வராக தொடர்வதற்காக பாஜக உயர்மட்ட தலைவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு ரூ.1,800 கோடியை கொடுத்துள்ளார். இதில் தற்போதைய

ஹரியாணாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

ஹரியாணாவின் ஹிசார் மாவட்டத்தில் பால்சாமண்ட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனது தோட்டத்தில் 60 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டினார். கடந்த புதன்கிழமை மாலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தை நதீம் கான் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர். ராணுவம், வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். மருத்துவர்கள் குழுவும் வரவழைக்கப்பட்டது. குழந்தை சிரமமின்றி சுவாசிப்பதற்காக ஆழ்துளைக் கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்ஸிஜன்

பாதுகாப்பு படைகளை இழிவுபடுத்தும் எதிர்க்கட்சிகளை 130 கோடி இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

பாதுகாப்புப் படைகளை இழிவு படுத்தும் எதிர்க்கட்சிகளை 130 கோடி இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்கான அமைப்பின் தலைவர் சாம் பித்ரோடா தனியார் செய்தி நிறு வனத்துக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் 300 தீவிரவாதி களை இந்திய விமானப்படை குண்டுகளை வீசி கொலை செய்த தாகக் கூறுகிறார்கள். உண்மை யாகவே தாக்குதல் நடந்ததா? 300 தீவிரவாதிகள் கொல்லப்பட் டார்களா? யாரும் கொல்லப்பட வில்லை என்று சர்வதேச

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை

பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையில் இயங்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன் னணி அமைப்புக்கு (ஜேகே எல்எப்) மத்திய அரசு நேற்று அதிரடி தடை விதித்துள்ளது. தீவிரவாத தடுப்புச் சட்டத் தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் ஜம்மு-காஷ்மீர் விடு தலை முன்னணி அமைப் பானது பல தீவிரவாத இயக் கங்களுக்கு உதவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து, இந்த

ராஜ்நாத் சிங், அத்வானி, கட்கரிக்கு ரூ.1800 கோடி அளித்ததாகப் புகார்: எடியூரப்பா  ‘டைரி நகல்கள்’ உண்மையானதாகத் தெரியவில்லை -வருமான வரித்துறை

கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஏறக்குறைய ரூ.1,800 கோடியை ராஜ்நாத்சிங், எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி உள்ளிட்ட பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு வழங்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக எடியூரப்பாவின் டைரி நகல்கள் உண்மையானதாகத் தெரியவில்லை ஆகவே அசல் டைரிப் பக்கங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கர்நாடக மாநில வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மீது புதிதாக அமைக்கப்பட்ட, லோக்பால் அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று

ஏர் இந்தியா ஊழியருக்கு  ‘பளார்’ விட்ட எம்.பி.க்கு தேர்தல் சீட் இல்லை.. ரம்ஜானின் போது முஸ்லிம் ஊழியருக்கு உணவை வாயில் திணித்தவருக்கு மீண்டும் சீட்

மக்களவைத் தேர்தல் 2019-க்காக சிவசேனா 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஏர் இந்தியா ஊழியரை அடித்த தன் கட்சி எம்.பி.க்கு சீட் அளிக்கவில்லை. ஓஸ்மனாபாத் தொகுதியைச் சேர்ந்த 59 வயது எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்  ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்து அதை பெருமையாக வெளியில் ஜம்பமடித்துக் கொண்டது நினைவிருக்கலாம். அப்போது அது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் இன்னொரு பெரிய சர்ச்சையில் சிக்கிய ராஜன் விகாரே தானே தொகுதியில் வேட்பாளராக மீண்டும்

‘ஓலா’ தேர்(கார்) சேவையை உடனடியாக ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

பெங்களூருவில் ஓலா தேர்(கார்) சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக ‘பைக் டாக்ஸி’க்கள் சேவையை நடத்தியதையடுத்து கர்நாடக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசுப் போக்குவரத்துத் துறை மார்ச் 18ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ஆனி டெக்னாலஜிஸ், ஓலா பெங்களூரு நிறுவனத்துக்கு அளித்த உரிமம் 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்

பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கியதாக எடியூரப்பா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்: மறுக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர்

பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா ரூ.1800 கோடி வழங்கியதாக ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மீது புதிதாக அமைக்கப்பட்ட, லோக்பால் அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ‘தி கேரவன்’ பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஏறக்குறைய

மத்திய அரசே நீங்கள் ராணுவம் அல்ல: பிரதமர் கண்டனத்துக்கு பதிலளித்து அகிலேஷ் யாதவ் காட்டம்

புல்வாமா தாக்குதல் குறித்து குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ் மத்திய அரசு தானே ராணுவம்போல செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ட்விட்டர் தளத்தில் தற்போது கடும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய அரசு ராணுவத்தை பகடைக்காயாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், ”புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமே தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கவன ஈர்ப்பு

மகாராஷ்டிராவில் அச்சுறுத்தும் பாஜக: கலகலக்கும் காங்கிரஸ் அணி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவதாலும், முஸ்லிம் வாக்கு வங்கி பிளவுபடும் சூழல் உள்ளதாலும் பாஜக கூட்டணி கூடுதல் ஆதாயம் ஏற்படும் சூழல் உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக அதிகமான மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. இங்கு மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதனால் அடுத்த ஆட்சிக்கு வருவது யார்? என்பதைத் தீர்மானிப்பதில் மகாராஷ்டிராவின் பங்கு மிக முக்கியமானது. தேசியக்

சன்னி தியோல், பூனம் தில்லான், ஹர்பஜன்சிங்; பஞ்சாபில் பாலிவுட் நட்சத்திரங்களைப் போட்டியிட வைக்க பாஜக யோசனை

பஞ்சாபில் பாலிவுட் நட்சத்திரங்களை போட்டியிட வைக்க பாஜக யோசனை செய்கிறது. அக்கட்சியின் பஞ்சாப் நிர்வாகிகள் சார்பில் திரை நட்சத்திரங்களான சன்னி தியோல் மற்றும் பூனம் தில்லான், கிரிக்கெட் வீரர் ஜர்பஜன்சிங் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மக்களவைக்காக பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக மே 19-ல் நடைபெறுகிறது. இதில், பாஜக மூன்றிலும், மீதியுள்ளவற்றில் அதன் கூட்டணியான சிரோமணி அகாலி தளம் கட்சியும் போட்டியிட முடிவாகி உள்ளது. அம்ருத்ஸர், குருதாஸ்பூர் மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய தொகுதிகள்

மாநில முதல்வர்கள் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி கடைசி; தெலங்கானா முதல்வருக்கு முதலிடம்: வாக்காளர்கள் கருத்துக் கணிப்பில் தகவல்

மாநில முதல்வர்கள் செயல்பாடு குறித்து வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமிக்கு கடைசி இடமும் , தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு முதலிடமும் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மாநில முதல்வர்கள் குறித்து ஒவ்வொரு மாநில மக்களிடம் ‘சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ்’ செய்தி நிறுவனம் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் செயல்பாட்டில் தெலங்கானா முதல்வர் கே.டி.சந்திரசேகர் ராவ் செயல்பாடு

முடிவுக்கு வருகிறதா ‘இரும்பு மனிதர்’ அத்வானியின் அரசியல் பயணமா?

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா களமிறங்குகிறார். இதன் மூலம் அத்வானியின் நீண்டநெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒருகாலத்தில் பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் அத்வானி. வல்லபாய் படேலைத் தொடர்ந்து இரண்டாவது ‘இரும்பு மனிதர்’ என பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அவர், கட்சியில் வளர்ந்து பெரும் தலைவராக உயர்ந்தது சுவாரஸ்யமானது. பாகிஸ்தானின் சிந்து

இமயமலை அருகே நிலச்சரிவில் சிக்கிய தம்பதி பத்திரமாக மீட்பு

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி அருகே குல்லு பள்ளத்தாக்கின் லாக்வேலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தம்பதியர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளத்தாக்குகளில் முக்கியமானது குல்லுவேலி. பீஸ் ஆற்றங்கரையில் மணாலிக்கும் லார்கிக்கும் இடையிலான பள்ளத்தாக்கில் இப்பகுதி அமைந்துள்ளது. மலைச்சரிவும் கிடுகிடு பள்ளங்களும் மிகுந்த இப்பகுதியில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலச்சரிவில் ஒரு வீடும் சிக்கி இடிந்து விழுந்தது. மலைப்பாறைகளின் சிதறல்களும் வீட்டின் இடிபாடுகளுக்குள்ளும் இதில் வசித்து வந்த தம்பதியர் சிக்கிக்கொண்டனர். உள்ளூர் அதிகாரிகள் விரைந்து

‘‘எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; பேச்சுகளை மறக்கவும் மாட்டார்கள்’’- பிரதமர் ஆவேசம்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்: புதுடெல்லி தொகுதியில் போட்டி?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முறைப்படி பாஜகவில் இன்று சேர்ந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாழ்த்துத் தெரிவித்தார். அதேசமயம் மற்றொரு வீரரான வீரேந்திர சேவாக் பாஜகவின் அழைப்பை புறக்கணித்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லி உள்ள 7 தொகுதிகளில் ஒரு தொகுதியில் குறிப்பாக புதுடெல்லியில் பாஜக சார்பில் கம்பீர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம்

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பபடையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3  தீவிரவாதிகள்  என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ஜம்மு காஷ்மீரில் ஷோபியன் மற்றும் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டனர். எனினும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டவர்கள்  குறித்த முழுவிவரம் விரைவில் தெரிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபோரே,பாராமுல்லா மாவட்டத்திலும் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை  நடந்து வருகிறது.

அமித் ஷா காந்திநகரில் போட்டியிட காரணம் என்ன?- அத்வானியை மார்க்கதர்ஷக் மண்டலுக்கு அனுப்பிய பாஜக: காங்கிரஸ் சாடல்

குஜராத் மாநிலம் காந்திநகரில் 6 முறை எம்.பியாக இருந்த எல்.கே. அத்வானிக்கு இந்த முறை சீட் வழங்காமல் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ” மார்க்தர்ஷக் மண்டலுக்கு முதல் ஆளாக எல்.கே.அத்வானியை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டார்கள்” என்று விமர்சித்துள்ளது. வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் பல்வேறு மாநிலங்களில்

“வாக்குகளைப் பெறுவே புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள், சதி நடந்திருக்கிறது”: சமாஜ்வாதி தலைவர் சர்ச்சைப் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் சர்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது

‘நானும் காவலாளிதான் கோஷத்தை பயன்படுத்தாதீர்கள்’: பிரதமர் மோடியை கிண்டல் செய்த சத்ருஹன் சின்ஹா

நானும் காவலாளிதான் எனும் முழக்கத்தை பிரதமர் மோடி, முன்வைத்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவ்வாறு தொடர்ந்து மோடி பேசுவது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு விடையளிக்கப்படாத கேள்விகளை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமையும் என்று பாஜஎம்.பி. சத்ருஹன் சின்ஹா பிரதமர் மோடியை கிண்டலுடன் விமர்சித்துள்ளார் ரஃபேர் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்காமல், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்

ஒடிசாவில் மகளிர் சுயஉதவிக் குழு தலைவி போட்டி- எந்த பின்புலமும் இல்லாத பெண்ணை வேட்பாளராக அறிவித்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 20 ஆண்டுகளுக்கு முன் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஸ்கா மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக மகளிர் சுயஉதவிக் குழு தலைவி ஒருவரை அறிவித் துள்ளார். இத் தொகுதியில் நன்கு படித்த உயர் சமூகத்துப் பெண்களை நிறுத்த வாய்ப்பிருந்தும், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, சமூகத்தின் அடித்தட்டு பெண் ஒருவரை நவீன் பட்நாயக் வேட்பாளராக அறிவித்துள்ளார். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம், நலகன்ட்டா கிராமத்தை சேர்ந்தவர் 68 வயது பிரமிளா பிசோய். 3-ம் வகுப்பு

அனைவரும் வாக்களிக்க நடிகர் சல்மான் வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து ஒரு வாரம் ஆன நிலையில், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என இந்தி நடிகர் சல்மான் கான் வலியுறுத்தி உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகள்

போலி செய்திகளை தடுப்பதில் ஒத்துழைப்பதாக தேர்தல் ஆணையத்திடம் சமூக வலைதளங்கள் உறுதி

போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு அளிப்பதாக தேர்தல் ஆணையத்திடம் சமூகவலைதளங்கள் உறுதி அளித்துள்ளன. துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் யூடியூப் மற்றும் கூகுள் சார்பில் பியூஷ் போதார், ட்விட்டர் சார்பில் மஹிமா கவுல், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் சார்பில் ஷிவ்நாத் தாக்கூர், பகிர்வுசாட் சார்பில் வர்கீஸ் மல்லு, பிகோ டிவியில் ஒரு மலேசிய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இவை அனைத்தும் சர்வதேச வலைதளங்கள் என்பதால் பொதுவான விதிமுறைகள்

பாஜக.வில் இணைகிறார் மேலும் ஒரு என்சிபி தலைவர்

மகாராஷ்ட்ராவில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான ரஞ்சித் சிங் மோஹிதே பாட்டீல், கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இது, அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலத் துணைத்

2019 மக்களவைத் தேர்தல்: காந்திநகரில் அத்வானிக்குப் பதிலாக அமித் ஷா; ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி : பாஜக முதல் பட்டியல் வெளியீடு

2019 மக்களவைத் தேர்தல்களுக்கான 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது.  காந்திநகரில் பலமுறை போட்டியிட்ட மூத்த தலைவர் அத்வானிக்குப் பதிலாக இம்முறை அமித் ஷா நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வாரணாசியில் பிரதமர் மோடியும், ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும்,  நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும் ஸ்மிருதி இரானி அமேதியிலும், காஜியாபாத்தில் ஜெனரல் வி.கே.சிங்கும் சமீபமாக நுழைந்துள்ள சுஜய் விகே பாட்டீல் அகமெட்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

1,200 ஆண்டுகால அடிமைத்தளை என்று பிரதமர் கூறியது எதை? தேர்தல் பிரச்சாரத்தில் ஓவைஸி விளக்கம்

சம்ஜோதா தொடர் வண்டிகுண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்த் 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஆசாசுதின் ஒவைஸி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். மோடியின் ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரச்சாரத்தைத் தாக்கிப் பேசிய ஓவைசி நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, “நீங்கள் என்ன மாதிரியான காவலாளி மோடி? சம்ஜோதா தொடர் வண்டிகுண்டு வெடிபில் 25 இந்தியர்கள் பலியாகினர்,  குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்,

பிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சாஸ்திரி சிலையை கங்கை நீர் கொண்டு கழுவிய பாஜகவினர்

உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாலை அணிவித்த லால் பகதூர் சாஸ்திரி சிலையை பாஜகவினர் கங்கை நீர் கொண்டு கழுவிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா காந்தி மாலை அணிவித்தார். இம்மாலை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மாலை என்று கூறப்படுகிறது. முன்பே பயன்படுத்திய மாலையை சாஸ்திரிஜி சிலைக்கு பிரியங்கா காந்தி அணிவித்தது கண்டனத்துக்குரியது என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்து

60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 18 மாதக் குழந்தை: உயிரோடு மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரம்

ஹரியாணா மாநிலத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று 60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது.இக்குழந்தையை மீட்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ”ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது வீட்டுக்கு வெளியே நதீம் என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. இக்குழந்தை அருகில் உள்ள 60 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதனால் உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இதில் தலையிட்டு குழந்தையை உயிரோடு மீட்டெடுக்கும் முயற்சிகளில்

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு: பிரதானமாக இருக்கும் வாரிசுகளும், பிரச்சார செலவும்

நம் நாட்டின் அரசியல் கட்சிகள் தம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க என ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை. தம் வசதிகளுக்கு ஏற்றபடி மாநில, பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகள் அவர்களை பல்வேறு முறைகளில் தேர்ந்தெடுக்கின்றனர். விருப்ப மனுவிற்குப் பின் கட்சி தேர்வுக்குழு மற்றும் தலைமை நிர்வாகிகளின் நேர்முகத்தேர்வு என அதன் பின்னணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ‘மறைமுக நோக்கம்’ உள்ளது. தமிழகத்தில் மட்டுமே விருப்ப மனு எனும் பெயரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. மனுக்களைப் பெற்ற பின் அதை

‘தாமரை’ மலர்கிறது; தடுக்கும் மம்தா: வாக்குகளை இழக்கும் காங்., இடதுசாரிகள்- மே.வங்கம் ஓர் அலசல்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தேசத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க பெண் தலைவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர். வரும் மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து, மத்தியில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பதை முடிவு செய்யும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக வியூகங்களையும், காய்களையும் நகர்த்தி வருகிறார் மம்தா. அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் முகவரி இல்லாமல் இருந்த பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எழுச்சி பெற்று தனக்கான அடையாளங்களை அதிகப்படுத்தி வருகிறது. 2021-ம் ஆண்டு

44% விவசாயிகளுக்கு மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் திட்டத்தில் நிதியுதவி சேரவில்லை

பிரதமரின் விவசாயி (பிஎம்கிசான்) நிதியுதவித் திட்டத்தின் விவசாய குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவதில் இதுவரை 56 சதவீதம் அதாவது, 2.74 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே முதல் கட்ட நிதி ரூ.2 ஆயிரம்  சென்று சேர்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. இன்னும், 2.18 கோடி குடும்பங்களுக்கு முதல்கட்ட நிதியான ரூ.2 ஆயிரம் சென்று சேரவில்லை. போலிகளைத் தடுப்பதற்காக 4 கட்ட சரிபார்த்தல் பணிகள் நடப்பதால், தாமதம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு தாக்கல் செய்த  இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில்

‘இந்தியா இனி இந்தியாவாக இருக்குமா?’- பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் பிரபல அமெரிக்க வாழ் இந்தியர்

அமெரிக்க வாழ் இந்தியரான ஹசன் மின்ஹஜ், நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் ‘இந்தியத் தேர்தல்’ என்ற தலைப்பில் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது இணையவெளியில் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது. யார் இந்த ஹசன்? உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிமான ஹசன் மின்ஹஜ் அமெரிக்காவில் ‘தி டெய்லி ஷோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தும்போது பிரபலமானார். நடிகரும் ஸ்டேண்ட் நகைச்சுவையனுமான ஹசன், தற்போது உலக அரசியல் விமர்சகராகவும் மாறிவிட்டார். என்ன நிகழ்ச்சி? நெட்ஃப்ளிக்ஸில் ‘Patriot Act’ என்னும் நிகழ்ச்சியின் மூலம்

வண்ணங்களின் விழாவில் மகிழ்ச்சி தங்கட்டும்: பாலிவுட் திரைக்கலைஞர்கள் ஹோலி வாழ்த்து

ரசிகர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாலிவுட் கலைஞர்கள் வண்ணங்களின் விழாவை மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பாலிவுட் கலைஞர்களின் வாழ்த்துரைகள் வருமாறு: அக்ஷய் குமார்: இந்த ஹோலி உங்கள் வாழ்க்கையில் மேலும் வண்ணங்களை சேர்க்கலாம். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி மற்றும் நவ்ரோஸ் முபாரக் வாழ்த்துக்கள். ஹிர்த்திக் ரோஷன்: ஹோலியின் புனிதமும் வண்ணங்களும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு ஆகியவற்றை நிரப்பட்டும். சந்தோஷமான ஹோலி…. அழகான மக்கள்…. மாதுரி தீக்ஷித்: இந்த ஹோலி ஒவ்வொருவரின்

மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச காங்கிரஸ் அமைத்த செயல்படாத குழு

மக்களவை தேர்தலில் கூட்டணிக்காக மற்ற கட்சிகளுடன் பேச காங்கிரஸ் அமைத்த குழு செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. ஏ.கே.அந்தோனி தலைமையிலான இக்குழுவின் உறுப்பினர்களாக அகமது பட்டேல், குலாநபி ஆசாத் மற்றும் அசோக் கெல்லோட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தக் குழு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடம் பேசி தேர்தலில் போட்டியிட கூட்டணிக்கான தொடக்ககட்ட பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இக்குழு இதுவரையும் ஒரு

ஜம்மு காஷ்மீரில் சகவீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்று தற்கொலைக்கு முயன்ற சிஆர்பிஎப் வீரர்

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தான் தங்கி இருக்கும் முகாமில், சகவீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில், பாட்டல் பட்டாலியன் பகுதியில் 187 பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. அங்கு சிஆர்பிஎப் வீரர் அஜித் குமார் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது, அவருக்கும் சகவீரர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சகவீரர்கள் 3 பேரை திடீரென

சிரஞ்சீவியின் மற்றொரு தம்பி ஜனசேனா கட்சியில் இணைந்தார்- நரசாபுரம் தொகுதியில் போட்டி

நடிகர் சிரஞ்சீவியின் குடும் பத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ‘மெகா’ குடும்பம் என அழைக் கின்றனர். இந்த மெகா குடும் பத்தின் முன்னோடியான சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சியை 2008-ம் ஆண்டு தொடங்கி 18 பேரவை தொகுதி களில் வெற்றி பெற்றார். ஆனால், அவர் அதன் பின்னர் அக்கட்சியை கலைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியுடன் அக்கட்சியை இணைத்து, மத் திய அமைச்சரானார். தற் போது அரசியிலில் இருந்து ஒதுங்கி உள்ளார் சிரஞ்சீவி. இந்நிலையில், ஜனசேனா கட்சியை

ஆந்திராவில் தந்தையை எதிர்த்து மகள் போட்டி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தெலுங்கு தேச கட்சியிலும், இவரது மகள் காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மோதுகின்றனர். தந்தை, மகள் இருவரும் ஒரெ தொகுதியில் போட்டியிடுவதால் வெற்றி யார் பக்கம் என்பது எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. ஆந்திர மாநில தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் தனித்து போட்டியிடுகிறது. இதேபோன்று, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், பாஜவும் தனித்தே தேர்தலை சந்திக்கின்றன. ஜனசேனா கட்சி மட்டும்

தேசியவாத காங். முன்னாள் எம்.பி. பாஜக.வில் இணைந்தார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விஜய்சிங் மொகித் பாட்டீல். மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரான இவர் தற்போது மாதா மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது மகன் ரஞ்சித்சிங் மொகித் பாட்டீல். இவர் தேசியவாத காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்சிங் நேற்று மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ரஞ்சித் சிங் கூறும்போது, “தேசியவாத காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்தேன்” என்றார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்

காங்கிரஸ் கட்சியின் பதவி ஆசையால் நாட்டுக்கு பாதிப்பு; தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

‘‘ஆட்சியில் இருக்கும் போது நாடாளுமன்றம், நீதித்துறை உட்பட அனைத்து அமைப்புகளையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி மீதுள்ள ஆசையால், இந்த நாடு மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு முன்னர் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன் னிட்டு பிரதமர் மோடி, தனது இணையதள ‘பிளாக்’கில் கூறி யிருப்பதாவது: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. மக் கள் வாக்களிக்க

சம்ஜோதா தொடர் வண்டிகுண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

சம்ஜோதா தொடர் வண்டிகுண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்த் 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஹரியாணா மாநிலம் பானிபட் அருகில் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுதொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த சிறப்பு நீதிபதி, இந்த

தேசத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: மாயாவதி அறிவிப்பு

தேசத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு, தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில் லக்னோவில் நிருபர்களுக்கு மாயாவதி இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”தேசத்தில்

மாயாவதி-காங்கிரஸ் மோதலின் பின்னணியில் உள்ள வாக்கு வங்கி

முக்கிய மாநிலமான உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியால் காங்கிரஸ் குறி வைத்து தாக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலின் பின்னணியில் பிராமணர், முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகள் மறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. உ.பி.யின் 80 தொகுதிகளில் அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியுடன் மாயாவதி கூட்டணி அமைத்தார். தன்னுடன் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்த்தவர் காங்கிரஸை மட்டும் விலக்கி வைத்தார். எனினும், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதியை

கேரளாவில் முக்கிய தொகுதிகளை பெற பாஜக தலைவர்களிடையே கடும் மோதல்: சமரசம் செய்யும் ஆர்எஸ்எஸ்

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக களமிறங்க பாஜக மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டுள்ளது. பாஜகவுக்கு அதிகமான வாக்கு வங்கி உள்ள திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மிசோரம் மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சசி தரூரை எதிர்த்து களம் இறங்க பலமான வேட்பாளர் தேவை என்பதால் இந்த தொகுதியில் கும்மனம்

2018-ம் ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை மோடி அழித்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதிமொழி அளித்த மோடி, கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 2 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக ஏப்ரல 11 மற்றும் 18 தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. வடகிழக்கு மாநிலமான

தேர்தலில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு எழுவதாகப் புகார்: டெல்லி மசூதிகளில் சிறப்பு பார்வையாளர்களை நியமிக்க பாஜக கோரிக்கை

தேர்தலில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் டெல்லியில் முஸ்லிம் வாழும் பகுதிகளில் எழுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதை எழுப்பிய டெல்லி பாஜக அங்கு சிறப்பு பார்வையாளர்களை அதன் மசூதிகளில் நியமிக்க வேண்டும் என மத்திய தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளது. இது குறித்து டெல்லி மாநில பாஜகவின் சட்டப்பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதில், டெல்லியில் ஆளும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியினர் மீது புகார் அனுப்பியுள்ளது. இது குறித்து டெல்லி பாஜகவின்

காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சிகளிடையே கூட்டணி இறுதியானது

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இரண்டு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், பல மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சை இன்னும் இறுதி செய்யாமல் காங்கிரஸ் கட்சி உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு தினங்களாக கூட்டணியை இறுதி செய்யும் பணியை காங்கிரஸ் வேகப்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலத்தில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பாஜகவுக்கு

தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு ‘படுமோசம்’: கேரளா, ராஜஸ்தான், குஜராத் எம்.பி.க்கள் ‘சூப்பர்’: ஆய்வில் தகவல்

16-வது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் எம்.பி.க்கள் செயல்பாடு, சேவை, பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்த மக்கள், தமிழகம், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநில எம்.பி.க்களின் செயல்பாடு மனநிறைவை அளிக்கவில்லை, மிகமோசம் என்று வாக்களித்துள்ளனர். அதேசமயம் கேரளா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் செயல்பாடு, பணிகள் மிகுந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் இணைந்து மக்களவை எம்.பி.க்கள் செயல்பாடு, பணிகள் ஆகியவை குறித்து வாக்காளர்களிடம் கருத்துகளைக் கேட்டது.

Older Posts››