வேலூர்: அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2019-2020ம் ஆண்டு தெடக்கநிலை, இடைநிலை வாயிலாக அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார்மன்றம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு […]
