Press "Enter" to skip to content

Posts tagged as “தமிழகம்”

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: எல்.ஐ.சி. தனியார் மயமாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை எல்.ஐ.சி. ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக எல்.ஐ.சி.…

கோடை சீசனுக்காக பராமரிப்பு பணி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பராமரிப்பு பணிக்காக பெரிய புல்மைதானம் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இவர்கள் ஊட்டியில்…

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு 19வது வார்டு  காளம்புழாபகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி பிரிவு 17 நிலத்தில் தனியார் ஒருவரால் கட்டப்பட்டு வந்த இரண்டு மாடிக் கட்டிடம் கட்ட கடந்த வருடம் வருவாய்த் துறையால் தடை…

அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் சின்னதடாகமாக மாறும் புதுப்பதி, சின்னாம்பதி

கோவை : கோவை வாளையாறு அடுத்த புதுப்பதி, சின்னாம்பதியில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையாறு அடுத்த மதுக்கரை…

110 அரங்குகள் அமைக்கப்படுகிறது நெல்லை புத்தக திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்பு, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு

நெல்லை: நெல்லை புத்தக திருவிழா பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி…

திருவாரூரில் இருந்து தஞ்சை வரை மின் பாதையில் அதிவேக சோதனை தொடர் வண்டிஓட்டம்: பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர்: திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் வரையிலான மின் ரயில் பாதையில் நேற்று பாதுகாப்பு ஆணையரின் தலைமையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. இந்திய ரயில்வேயில் கடந்த காலங்களில் நிலக்கரியை கொண்டு ரயில் இன்ஜின்கள்…

குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணை கைதியான மகேந்திரன் (55) தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source:…

வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் சேதமடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?… பயணிகள் எதிர்பார்ப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் உள்ள நிழற்குடையில் பயணிகள் அமரும் இடம் சேதமடைந்து கிடப்பதை சரிசெய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் புதுப்பட்டி ஊருக்கு செல்லக்கூடிய பயணிகள் வெயில்,…

காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர் நற்பணி மன்றம்

காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். காரியாபட்டியில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விருதுநகர் நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட காரியாபட்டி அன்னை தெரசா…

திருச்சுழி அருகே தமிழ்பாடியில் ஆமை வேகத்தில் நடைபெறும் அரசுப்பள்ளியின் கட்டிட பணி

திருச்சுழி: திருச்சுழி அருகே அரசுப் பள்ளியன் கட்டிட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடியில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ்பாடி, கரிசல்குளம்,…

மதுரை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறுவது எப்போது?… 8 ஆண்டாக கிடப்பில் கிடக்கிறது

மதுரை:  புராதன சிறப்பு மிகுந்த மதுரை மாநகரில், 148 ச.கி.மீ. பரப்பளவில் சுமார் 20 லட்சம் பொதுமக்கள் வாழ்கின்றனர். மாநகர் எல்லையை தாண்டி திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலைபுதுக்கோட்டை வரை நகர்பகுதி விரிவடைந்து வருகிறது.…

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மதுரையில் ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு

மதுரை:  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது. இதனால், மதுரையில் நேற்று ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத…

5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் வீடு முற்றுகை: 200 பேர் கைது

கோபி: 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி  கோபியில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட வந்த ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம்…

அறந்தாங்கி நகராட்சியின் அவலம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சமடையும் மாடுகள்… நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

அறந்தாங்கி: அறந்தாங்கி நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததால், அந்த மாடுகள் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சமடைவதால், அங்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அறந்தாங்கி…

புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது: பிரிய மனமின்றி விடைபெற்ற கோயில் யானைகள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே 48 நாட்கள் நடந்த கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக ராஜ்மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருபுவனம் ஊராட்சி ஒன்றியத் தேர்தலை ஒத்திவைத்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குறித்து அவதூறு பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

காட்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து குழந்தையுடன் பெண் கதறி அழுததால் பரபரப்பு

காட்பாடி: காட்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து குழந்தையுடன் பெண் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணியாற்றிய தனது கணவர் 2013-ல் காலமாகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை…

களியக்காவிளை அருகே எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

குமரி: களியக்காவிளை அருகே எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஷேக் தாவூத் என்பவரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மீனவ கிராமத்தில்…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு

சென்னை: கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் வீட்டை தமிழ் பேரவை அமைப்பினர் முற்றுகையிடப்போவதாக அறிவித்த நிலையில் போலீஸ்…

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது பார வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

குமரி: கன்னியாகுமரி தக்கலை பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். பத்மநாபபுரம் நகராட்சி தற்காலிக ஊழியர் ரதிகுமாரி விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

வைகையில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: வைகையில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூய்மையான நகராக மதுரையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் கூறியுள்ளார். Source: Dinakaran

சிறைத்துறையில் ஊழல் நடைபெறுகிறது; தவறு கண்டுப்பிடிக்கபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி எச்சரிக்கை

சென்னை: சிறைத்துறையில் ஊழல் நடைபெறுவதாக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை துணைத்தலைவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சிறைத்துறை டிஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சிறைகளில் தவறு கண்டுப்பிடிக்கபட்டால் கடும் நடவடிக்கை…

உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோயில் கட்டப்படும்; திருப்பதியில் சாமி பார்வை செய்த பின் முதல்வர் பேட்டி

திருப்பதி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோயில் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பதியில்…

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

* தகராறு செய்ததால் 9 மாதத்திற்குபின் புகார்* கணவர் உட்பட 3 பேர் மீது போக்சோவில் வழக்கு தர்மபுரி:  தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கொல்லப்பட்டி புது கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பழனி-முனியம்மாள் தம்பதி.…

மைனர் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிமுக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் கைது: ஆம்பூர் மகளிர் காவல் துறையினர் விசாரணை

ஆம்பூர்: ஆம்பூர் அருகே அதிமுக பெண் பிரமுகர் ஒருவர் பெங்களூரு மைனர் பெண்ணை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத்…

சோளிங்கர் அடுத்த எரிவாயு உருளை வெடித்து 2 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த புலிவலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயமடைந்த 2 பேர் உயிரிழந்தனர். வேலூர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நடராஜன், காளியப்பன் உயிரிழந்தனர். ஜனவரி 29ல் கேஸ் சிலிண்டர்…

தென் மாவட்ட மக்களின் கனவு நிறைவேற குமரி – மதுரை இரட்டை தொடர் வண்டிபாதை திட்டத்துக்கு அதிக நிதி கிடைக்குமா?

நாகர்கோவில்: மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெறும் ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருங்கிணைந்த 2020 -21- க்கான மத்திய அரசின்…

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தோல்வி: வங்கிகள் வேலைநிறுத்தம் 10 லட்சம் ஊழியர் பங்கேற்பு

சென்னை: புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த…

செல்லம்பட்டி அருகே அங்கன்வாடிக்குள் புகுந்த பாம்புகள் மீட்பு

உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே அங்கன்வாடிக்குள் புகுந்து பாம்புகள் மீட்கப்பட்டன. இதனால் அங்கவன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி ஒன்றியத்திலுள்ளது கீழப்பச்சேரி. இந்த கிராமத்திலுள்ள அங்கன்வாடிக்குள் 6…

மதுரை நெருக்கடிக்கு தீர்வு காண திருமங்கலம் முதல் மேலூர் வரை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கனவு திட்டம் நனவாகுமா?

மதுரை: மதுரை நெருக்கடிக்கு தீர்வு காண திருமங்கலம் முதல் மேலூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் வருமா? என ஓரிரு மாதங்களில் தாக்கலாகும் தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.…

மேட்டுப்பாளையம் அருகே 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 48 நாட்கள் நடந்து வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்று நிறைவு பெற்றது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில்…

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு பிப்.12 வரை நீதிமன்ற காவல்

பாம்பன்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பாம்பன் மீனவர்கள் 8 பேரும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.எல்லை…

வீட்டின் மேற்கூரை இடிந்து 2 சிறுவர்கள் பலி: பரமக்குடி அருகே சோகம்

பரமக்குடி: பரமக்குடி அருகே நேற்றிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும், சிறுவர்களின் தாயும் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ளது…

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை

சென்னை: குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணைய புகாரை அடுத்து குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது.…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதிக்கு அரசு ஒப்புதல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதிக்கு அரசு ஒப்புதல் வழங்கியதாக தக்கார் அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் வீரவசுந்தராயர் மண்டபம்…

தமிழகத்தில் பிப்ரவரி 6ல் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம்

கோவை: தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 6ம் தேதி தொடங்கும் புத்துணர்வு முகாம் 48 நாட்கள் நடைபெறும் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.…

பாலிநுட்பம் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196  பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 196 பேருக்கு வாழ்நாள் தடை…

வெளி மாநில வரத்து துவங்கியதால் பெரிய வெங்காயம் விலை சரிந்தது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து பல்லாரி வரத்தால், அதன் விலை சரிய துவங்கியுள்ளது. தற்போது ஒருகிலோ ரூ.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.  பொள்ளாச்சியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு தினமும் டன் கணக்கில் கொண்டுவரப்படும்…

ரசாயன கழிவுநீரை தேக்கி வைக்கும் குட்டையாய் உருமாறிய நரசிங்கபுரம் ஏரி

வேலூர்:  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு கட்டுப்பாட்டில் 565 ஏரிகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களும், குட்டைகளும், பாசன கால்வாய்களும், ஏரிக்கால்வாய்களும் உள்ளன. இதுபோக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய…

ஓசூரில் திறந்தவெளி ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ஓசூர்: செலவு குறைவால் ஓசூரில் திறந்த வெளி ரோஜா பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மண்வளம் மற்றும் சீரான தட்பவெப்பநிலை நிலவி வருவதால், இங்கு…

பள்ளிகொண்டா சிறுவர் இல்லத்திற்கு வாட்டர் ஹீட்டர் இயந்திரம் ஐவிடிபி நிறுவனர் வழங்கினார்

கிருஷ்ணகிரி: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் லிட்டில் பிளவர் சிறுவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோர்கள் பிரிந்த 310 சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். எவ்வகையிலும் இந்த…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு நெல்லை, தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கானோர் மனிதசங்கிலி

நெல்லை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய மனிதசங்கிலி இயக்கத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டம்,…

உடன் வேலைபார்க்கும் அதிகாரி காதலித்து திருமணம் செய்ய மறுக்கிறார் வங்கி பெண் அதிகாரி தற்கொலை செய்யப்போவதாக விடுத்த காணொளி

தர்மபுரி: தர்மபுரி அருகே வங்கி அதிகாரி திருமணம் செய்ய மறுப்பதால், உயிரை விடுவேன் என இளம்பெண் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 25…

450 காளைகளுடன் 350 வீரர்கள் மல்லுக்கட்டினர் நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. இதில் 450 காளைகளும், அதை அடக்க 350 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். கலர் பிரிண்ட் எடுத்த போலி அனுமதி சீட்டுடன்…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – புதிய பதிவெண் பட்டியல் வெளியீடு

சென்னை: 2019ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடர்பாக 39 பேரின் புதிய பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 39 பேரின் புதிய பதிவெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. பதிவெண் பட்டியலில் இடம்பெற்ற…

தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் நாள் தோறும் 15,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாக…

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவில் இருந்து இதுவரை 242 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள…

சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக்கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை: கொரோனா வைரஸ் பாதித்த சீனாவில் சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுப்பது…

குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை குறித்து சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய…

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை அதிகரிப்பு

பரமக்குடி :  பரமக்குடி பகுதியில் மூன்று ஆண்டுகளாக போதிய மழையின்றி வறண்டு காணப்பட்ட தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில், இந்தாண்டு போதிய மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியதால் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வர துவங்கியுள்ளன.  தமிழகத்தில்…