Press "Enter" to skip to content

Posts published in “இந்தியா”

கடமையைச் செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்டா?- மோடியின் உலங்கூர்தியில் என்ன இருந்தது?: காங்கிரஸ் கேள்வி

பிரதமர் மோடியின் உலங்கூர்தியை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை பணியிடைநீக்கம் செய்த தேர்தல் ஆணைய நடவடிக்கை மீது காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம்…

மே. வங்கத்தில் வாக்குப் பதிவின்போது வன்முறை: மார்க்சிஸ்ட் வேட்பளர் தேர்(கார்) மீது கல்வீச்சு, காவல் துறையினர் தடியடி

மேற்கு வங்க மாநிலம், டார்ஜ்லிங் தொகுதி, ராய்காஞ்ச் பகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரின் கார்  மீது மர்ம நபர்கள் கல்வீசியதால், கண்ணாடி நொறுங்கியது. காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினரை…

சத்தீஸ்கரில் பாஜக நக்சலைட்டுகளுடன் கைகோர்த்துள்ளனர்: முதல்வர் பூபேஷ் பாகெல் பகீர் குற்றச்சாட்டு

சத்தீஸ்கரில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் பலியானதையடுத்து பல கேள்விகளை பாஜக முன்னிறுத்தியது. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “தி இந்து”(ஆங்கிலம்)…

வாரணாசியில் போட்டி இல்லை, மெகா கூட்டணிக்கு ஆதரவு –தலித் கட்சி தலைவர் சந்திரசேகர ஆசாத் அறிவிப்பு

உ.பி.யின் வாரணாசியில் போட்டியிடப் போவதில்லை என ‘ராவண்’ என்கிற சந்திரசேகர ஆசாத் அறிவித்துள்ளார். தலித் கட்சிகளில் ஒன்றான பீம் ஆர்மி தலைவரான அவர் தனது ஆதரவை மெகா கூட்டணி வேட்பாளருக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். உ.பி.யின்…

அந்தப்பக்கம் போக வேண்டாம் என்று காவல் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்; புறக்கணித்தார் பீமா மாண்டவி: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தும் சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் அப்பகுதி எம்.எல்.ஏ பீமா மாண்டவி உட்பட 5 பேர் பலியாகினர். இது குறித்த தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் எழுப்பிய…

‘நியாயத்துக்காக வாக்களியுங்கள்’-ராகுல் காந்தி; ‘ஜனநாயகத்தை வலிமையாக்க ஓட்டளியுங்கள்’: பிரதமர் மோடி

நியாயத்துக்காக வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஜனநாயக்கத்தை வலிமையாக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர மோடியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்டவாக்குப்பதிவு இன்று நடக்கிறது. தமிழகம்,…

பிரதமர் மோடி பயணிக்கும் உலங்கூர்தியை சோதனையிட்ட அதிகாரி ‘பணியிடைநீக்கம்’: தேர்தல் ஆணையம் அதிரடி

பிரதமர் மோடி பயணம் செய்யும் உலங்கூர்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருக்கிறதா என்று சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றிருந்தார்.…

நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? – பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி

இந்தியாவின் தேர்தல் நாடி என்று கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகர் தர்மேந்திராவின் மனைவி நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். அங்கு வீடு விடாகச் செல்வது குழந்தையைத்…

கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு: தேவகவுடா, பேரன்கள் உள்பட 241 வேட்பாளர்கள் போட்டி

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும்…

ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு? – இன்று 2ம் கட்ட தேர்தல் களம் காணும் உத்தரப் பிரதேசம்

தேர்தல் 2019-ல் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு மாநிலமாக உ.பி.உள்ளது. இங்கு பாஜக, சமாஜ்வாதி-மாயாவதி, காங்கிரஸ் என்று மும்முனைப் போட்டி நிலவுகிறது.  இந்நிலையில் இங்கு தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஜாட் சமூகத்தினரின் வாக்குகள்…

95 மக்களவைத் தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 91…

மிகுதியாக பகிரப்பட்ட ராகுல் காந்தி காணொளி: பியூஷ் கோயல் கிண்டல் – குஷ்பு பதிலடி

மிகுதியாக பகிரப்பட்ட ராகுல் காந்தி காணொளி தொடர்பான பியூஷ் கோயல் கிண்டலுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதி தவிர்த்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். தேர்தல்…

இரவு முதல் சேவையை முழுதும் நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்

இன்று இரவு அமிர்தசரஸ்-மும்பை விமானத்துடன் தற்காலிகமாக தனது அயல்நாட்டு, உள்நாட்டு விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம்…

அமித் ஷாவை சிறைக்கு அனுப்பி என் ஆட்சியை கவிழ்க்கப் பார்த்தது ஐமுகூ அரசு: பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டு

இப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சில காவல் துறை அதிகாரிகளையும் சிறைக்குள் தள்ளி குஜராத்தில் தன் ஆட்சியைக் கவிழ்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி முயற்சி செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி…

நான்கு மாநிலங்களில் திடீர் மழைக்கு 50 பேர் பலி; குஜராத் மக்களுக்கு மட்டும் நிவாரணமா? கமல்நாத் புகாருக்கு கிடைத்த பலன்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் திடீர் மழை, காற்றுக்கு 50பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு குஜராத்திற்கு மட்டும் பிரதமர் நிவாரணம் அறிவித்தது சர்ச்சைக்குள்ளானது. முதலில்…

மோடியை எதிர்த்தால் கனிமொழிக்கு எதிராக வருமான வரி சோதனையா? – மம்தா பானர்ஜி கண்டனம்

பாஜகவையும், நரேந்திர மோடியையும் கடுமையான எதிர்க்கும் ஒரே காரணத்துக்காக வருமான வரித்துறையை ஏவி திமுக வேட்பாளர் கனிமொழியை மத்திய அரசு துன்புறுத்துவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளை நசுக்கும் மோடி அரசுக்கு…

தேர்தல் 2019: ராஜஸ்தானில் ஜாட், குஜ்ஜார் சமூக தலைவர்களை வளைத்த பாஜக

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வாக்களித்த ஜாட் மற்றும் குஜ்ஜசார் சமூக தலைவர்களை அக்கட்சி மீணடும் தங்கள் அணிக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு…

சாத்வி பிரக்யா பாஜகவில் இணைந்தார்: திக் விஜய் சிங்கை எதிர்த்து போபாலில் போட்டி?

மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்று பாஜகவில் இணைந்தார். போபால் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. கடந்த செப்டம்பர் 2006-ல் மகாராஷ்டிராவின்…

தென்னகக் குரலும் முக்கியமானது என்பதை உணர்த்தவே கேரளாவிலிருந்து போட்டி: வயநாட்டில் ராகுல்காந்தி பேச்சு

கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தென்னிந்தியாவில் போட்டியிடுவதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளின் குரலைப் போல் தென்னகக் குரலும் முக்கியமானது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன் எனப் பேசினார்.…

என்னை திருடன் எனக்கூறி என் சமூகத்துக்கே களங்கம் விளைக்கிறார் ராகுல் காந்தி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மோடி என பெயர்வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசி, நான் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு களங்கம் விளைவிக்கிறார் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி தேர்தல்…

6 ஆண்டுகள் போராடி தந்தையை நிரூபித்த திவாரியின் மகன் டெல்லியில் திடீர் மரணம்

உத்தர பிரதேச மறைந்த முதல்வர் என்.டி.திவாரியின் மகன் என 6 ஆண்டுகள் போராடி நிரூபித்த ரோஹித் சேகர் (வயது 40) நேற்று திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.…

முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது: சித்துவின் பேச்சுக்கு எதிராக வழக்குப்பதிவு

முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என்று மதரீதியாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக பிஹார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிஹாரின் கத்தியார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும்,…

மோடியின் உலங்கூர்தியில் சந்தேகத்துக்குரிய பெட்டி: தலைமை தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் புகார்

பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சித்தரதுர்காவில் பிரச்சாரம் செய்யவந்தபோது, அவரின் ஹெரிகாப்டரில் சந்தேகத்துக்குரிய வகையில் கறுப்பு நிற பெட்டி இருந்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மனு…

400 கி.மீ, ஐந்தரை மணிநேர பயணம்: பச்சிளங் குழந்தை உயிர் காக்க சாலையை ஒதுக்கிய கேரள மக்கள்

பிறந்த 15 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக 400 கி.மீ சாலையை ஐந்தரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் கடக்க எந்தவிதமான இடையூறும் இன்றி கேரள மக்கள் ஒதுக்கிக்கொடுத்து உயிரைக்காக்க உதவியுள்ளனர். கேரள முதல்வர்…

உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்பிஎஸ்பி கட்சி 38 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு

உத்தரபிரதேச அமைச்சரும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின்(எஸ்பிஎஸ்பி) தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகினார். தனித்து போட்டியிட வேண்டி உ.பி.யில் 38 வேட்பாளர்களை அறிவித்தது பாஜகவிற்கு பின்னடைவாகக்…

யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும்.. வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார்: சர்ச்சையான பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் பேச்சு

வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி கேமரா வைத்துள்ளார், யாருக்கு  வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும் என்று பாஜக எம்.எல்.ஏ.ஒருவர் பேசிய காணொளிவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ் கடாரா வாக்காளர்களிடம் பேசுகையில், தாமரை…

இன்னொரு பணமதிப்பு நீக்க நடவடிக்கை வருமா? – மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நழுவல்

மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பணமதிப்பு நீக்கம் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு அவர் நழுவலான பதிலைத் தெரிவித்துள்ளார். கருப்புப் பணத்தை ஒழிப்பதில் ஏற்கெனவே மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியான…

சத்ருகன் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதியில் இணைந்தார்: லக்னோவில் ராஜ்நாத்தை எதிர்த்து போட்டி

2014-ல் இரண்டாம் முறையாக பாஜக எம்பியான சத்ருகன் தன் கட்சியை விமர்சனம் செய்து வந்தார். இதனால், அவரை தன்கட்சியில் இழுத்து லக்னோவில் போட்டியிட வைக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் முயன்றார். இதற்காக, சத்ருகன்…

உ.பி.யில் பாஜகவிற்கு பின்னடைவு: கூட்டணியில் இருந்து விலகிய எஸ்பிஎஸ்பி கட்சி 39 தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு

உத்தரப் பிரதேச அமைச்சரும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின்(எஸ்பிஎஸ்பி) தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) இருந்து விலகினார். தனித்து போட்டியிட வேண்டி உ.பி.யில் 39 வேட்பாளர்களை அறிவித்தது பாஜகவிற்கு பின்னடைவாகக்…

தேசம் மக்களால் ஆளப்பட வேண்டும்; தனிமனிதரால், ஒற்றை சித்தாந்தத்தால் அல்ல: ராகுல் காந்தி தாக்கு

இந்திய தேசம் மக்களால் ஆளப்பட வேண்டும், தனிமனிதரால் ஒரு சித்தாந்தத்தால் அல்ல.  பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் அனைத்து குரல்களையும் நசுக்குகின்றன  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்…

”ஒரு பெண்மூலம் பறப்பது பெருமை” – இளம் பைலட்டுக்கு பிரியங்கா வாழ்த்து

மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை பிரச்சாரத்திற்கு உலங்கூர்தியில் அழைத்துச்சென்ற இளம் பெண் பைலட்டுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரியங்கா. இளம் பெண் பைலட்டுடன் உலங்கூர்தியில்…

மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிக்கும் மனு: சபரிமலை தீர்ப்பை சுட்டிக்காட்டி விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

நாடுமுழுவதும் மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு, தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் பதில் அளிக்க அறிவிப்பு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.…

இப்போது அதிகாரம் கிடைத்துவிட்டதா?- தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்

மாயாவதி, ஆதித்யநாத், ஆசம் கான் ஆகியோரின் பிரச்சாரத்துக்குத் தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. அதிகாரம் இல்லை என்று கூறிய நிலையில், இப்போது அதிகாரம் கிடைத்துவிட்டதா என்று தேர்தல்…

உ.பி.யில் தேர்தலுக்காக வந்த நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்குப் பணப் பட்டுவாடா நடைபெறுவதைக் கண்காணித்து கட்டுக்கட்டாக பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. உ.பி.யிலோ இதற்கு மாறாக நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இங்கு வன்முறைக்கு வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சசிதரூரை சந்தித்து நலம் விசாரித்தார் நிர்மலா சீதாராமன்: அரசியல் பண்பாடு என தரூர் ட்விட்டரில் நெகிழ்ச்சி

துலாபார தானத்தின்போது தராசு சங்கிலி விழுந்து காயம்பட்ட சசிதரூரைச் சந்தித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார். இதை நெகிழ்ச்சியுடன் சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளான…

48 மணிநேர பிரச்சாரத் தடை: மாயாவதி மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரச்சாரம் செய்ய 48 மணிநேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உ.பி. முதல்வர் ஆதித்யநாத்…

நீங்கள் மனித குலத்துக்கு ஒரு இழுக்கு: ஆசம்கான் பேச்சுக்கு குஷ்பு காட்டம்

ஜெயப்பிரதா குறித்து ஆசம்கானின் பேச்சுக்கு, குஷ்பு தனது கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சயின் ஆசம்கான். அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான…

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு?

வேலூர் மக்களவைத் தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தேர்தல்…

‘நான் பாஜகவுக்கு ஆதரவு’: ரவிந்திர ஜடேஜா வெளிப்படை: பிரதமர் மோடி வாழ்த்து

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபின் ரவிந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று வெளிப்படையாக பதிவிட்டார். அதற்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ஜடேஜாவுக்கு பிரதமர்…

உயிருக்கு ஆபத்து: நடிகை ஊர்மிளா புகார்

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், வடக்கு மும்பை மக் களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஊர்மிளா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை பார்த்துவிட்டு முடிவு எடுங்கள்: ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மோடி கதா பாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப் படம் நாடு முழுவதும் கடந்த 11-ம்…

நடிகை ஜெயப்பிரதா மீது பாலியல்ரீதியாக விமர்சனம்; ஆசம்கான் மீது வழக்குப் பதிவு: பிரச்சாரம் செய்ய தடை விதிப்பு

உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான், பொதுமேடையில் நடிகை ஜெயப்பிரதா மீது பாலியல் ரீதியாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரால் கடும் கண்டனத்திற்கு உள்ளான அவர் மீது…

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் கைதுக்கு பத்திரிகையாளர், எழுத்தாளர்கள் கண்டனம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன்அசாஞ்ச் கைது செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரக வளாகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்ச் மீது ஸ்வீடனில்…

பிரதமர் மோடியின் மக்களவைப் பிரச்சாரத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது?- ராகுல் காந்தி கேள்வி

பிரதமர் மோடியின் மக்களவைப் பிரச்சாரத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது, யார் தருகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேசம் ஆக்ரா மாவட்டம், பதேபூர் சிக்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்…

நீங்கள் தேசியவாதி என்றால் பாகிஸ்தானைப் பற்றி பேசாதீர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுங்கள்: பாஜகவை விளாசிய பிரியங்கா காந்தி

நீங்கள் தேசியவாதி என்றால் பாகிஸ்தானை எப்போதும் விமர்சிப்பதை விடுத்து இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள் என உத்தரப் பிரதேச பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…

மதரீதியாக வெறுப்பைத் தூண்டுமாறு பேசும் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒப்புதல்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சாதி, மதரீதியாக மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசும் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லாமல், பற்கள் இல்லாத அமைப்பாக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்…

பிஹாரில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற கிராமம்; தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு

அடிப்படை வசதிகளைச் செய்து தராமல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தத்தா கிராமம். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட…

மக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக தூக்கியெறியப்பட்ட வேண்டும்: சீறும் மாயாவதி

மேனகா காந்தி, யோகி ஆதித்யநாத் போன்றோரின் மக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி. பாஜகவினரின்…

ரஃபேல் விவகாரம்; அவமதிப்பு வழக்கில்  ராகுல் காந்திக்கு அறிவிப்பு:  விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த டெல்லி எம்.பி. மீனாட்சி…

பாஜக வளர்ந்த கதை: முகர்ஜி முதல் மோடி வரை…

பாஜக இன்று நாடுமுழுவிய அளவில் வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது. அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தும் கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஆனால் இன்றைய பாஜகவுக்கான விதை சுதந்திரத்துக்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது. இதற்கு…