Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

வியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

வியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இங்குதான் மோசமான ‘ஆரஞ்ச்’ எனப்படும் ரசாயணத்தை அந்நாடு சேமித்து வைத்திருந்தது. வியட்நாம் போர் முடிந்து…

அமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது

புளோரிடா மாநிலத்தில் 9 பேரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பதின்ம வயது மாணவியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவென் பார்க் நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 14 வயதான இரண்டு…

அமெரிக்காவில் வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள் மற்றும் பிற செய்திகள்

பல ஆண்டுகள் சித்ரவதை செய்தும், பட்டினி போட்டும் வளர்த்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ள நிலையில், அந்தக் கலிஃபோர்னியத் தம்பதியரின் குழந்தைகள் பெற்றோரை மன்னித்துவிட்டதாக தெரிவித்துள்ளர். பெற்றோர் தங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்திருந்தாலும், தங்களின்…

முல்லர் அறிக்கை: அதிபர் டிரம்புக்கு ஜனநாயக கட்சி தொடர்ந்து அழுத்தம்

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது தொடர்பாக ரஷ்யாவின் பங்கு இருந்ததா என்பது குறித்து நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு ஓர் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிபர்…

கனடா பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் மூவர் பலி மற்றும் பிற செய்திகள்

கனடியன் ராக்கீஸ் என்ற கனடா நாட்டு மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் மூன்று பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற மூன்று பேர், சரியான…

முல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றி விசாரித்தவர்

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள்…

புதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட கொரியா மற்றும் பிற செய்திகள்

புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது…

ஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட சூடான் அதிபர் சிறையில் அடைப்பு

சூடானின் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ராணுவம் அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக…

அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மனைவி, இடமாற்றம் செய்யப்பட்ட ரஷ்ய பாதிரியார்

ரஷ்யாவில் உரால்ஸ் பிராந்தியத்தில், தவக்காலத்தின் போது நடந்த உள்ளூர் அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்ணின் கணவரான பழமைவாத பாதிரியார் தொலைதூர கிராமத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். மக்னிடோகோர்ஸ்க் நகரில் அழகு நிலையம் நடத்தி வரும்…

நோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர்

பாரிஸ் நகரில் தீ விபத்தால் சேதமடைந்துள்ள ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் இருக்கும் அதே இடத்தில் முன்பைவிட அழகாக புதிதாக மறுநிர்மாணம் செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.…

எகிப்து அதிபரை 2030 வரை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம் மற்றும் பிற செய்திகள்

எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழிவகை சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடைகிறது. ஆனால் தற்போது…

பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயத்தின் ஏழு பொக்கிஷங்கள் என்னென்ன?

பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கதீட்ரலில் “பெரும் சேதங்கள்” ஏற்பட்டிருப்பதாக…

பாரீஸ் நோட்ர-டாம் தேவாலயத்தில் பெரும் தீ விபத்து – மக்கள் அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நோட்ர–டாமில் ஒரு மிக புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு…

பிரான்ஸ்: 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பெரும் தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நோட்ரடாமில் ஒரு மிக புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு…

ஒரு நாளைக்கு 12 மணிநேரம்; வாரத்திற்கு 6 நாட்கள் வேலை – சர்ச்சையில் ஜாக் மா மற்றும் பிற செய்திகள்

சீனாவிலுள்ள அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்வதை கட்டாயமாக்கும் செயல்முறையை ஆதரித்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 1970களின்…

ஃபுகுஷிமா: சுனாமியால் உருகிய அணு உலையில் இருந்து எரிபொருள் அகற்றும் பணி தொடக்கம்

2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் விபத்துக்குள்ளாகி உருகிய ஜப்பான் நாட்டு ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கரு எரிபொருளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது அந்த அணு உலையை இயக்கிய நிறுவனம். மூன்றாம்…

சீனாவில் உலகின் அரிதான வகை ஆமை இறந்தது

உலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது. இந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது. இந்த வகை ஆமையை பெருக்குவதற்காக…

அமெரிக்காவில் செல்லப் பறவை தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான செல்லப் பறவை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பறவை முதியவரை தாக்கியது தொடர்பாக தங்களுக்கு வெள்ளிக்கிழமையன்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,…

ஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய தகவல்கள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பான ஒன்றிலிருந்து தப்பிக்க, ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படக்கூடாது என்று ஏழாண்டுகளுக்கு…

கடலில் மிதக்கும் நகரங்கள் – எதிர்காலத்தின் கனவுத் திட்டம்

கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால், இந்த மிதக்கும் நகரங்கள் ஒரு தீர்வாக அமையலாம் என்று ஐ.நா கூறுகிறது. ஆனால், இது எதிர்காலத்தில் சாத்தியமாகுமா? பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :…

“அமெரிக்காவிடம் சரியான அணுகுமுறை இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்” – வட கொரியா

“அமெரிக்கா சரியான அணுகுமுறையோடு வந்தால் மட்டுமே அதிபர் டொனால்டு டிரம்புடன் மூன்றாவது பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வேன்” என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை சனிக்கிழமை கிம் ஜாங்-உன் தெரிவித்ததாக…

நோயாளிகளுக்கு தனது விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர் மற்றும் பிற செய்திகள்

ஹாலாந்தில், மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் அனுமதி இல்லாமல் தனது விந்தணுவை செலுத்தியதன் மூலம் 49 குழந்தைகள் பிறந்துள்ளது உறுதியாகியுள்ளது. டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் ஹாலந்தின் ரோட்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள…

நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான இஸ்ரேல் விண்கலம் மற்றும் பிற செய்திகள்

உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில்…

தைவான் பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள்; எந்த பாதிப்பும் இன்றி அகற்றிய மருத்துவர்

தைவானில் வாழும் பெண்ணொருவரின் கண்ணில் இருந்து நான்கு தேனீக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஹீ என்ற அந்த 28 வயதான பெண் செடிகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, அவரது கண்ணில் இந்த தேனீக்கள் புகுந்துள்ளன. நான்கு மில்லிமீட்டர் நீளமுள்ள…

ஒமர் அல் பஷீர் : 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபரை ராணுவம் கைது செய்தது

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் தோன்றிய சூடான் பாதுகாப்பு அமைச்சர் அவாத்…

ஜூலியன் அசாஞ்சே: விக்கிலீக்ஸ் துணை நிறுவனர் லண்டனில் கைது

விக்கிலீக்ஸ் துணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம்…

கிராம மக்களுக்காக கென்யாவில் தனி ஒருவராக சாலை அமைக்கும் முதியவர்

தனது கிராமவாசிகளின் துயரை போக்க, தாமாகவே ஒரு சாலை கட்ட உள்ளதாக கென்யாவில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அடர்ந்த புதர்களின் வழியாக, அருகில் உள்ள கடைகள் வரை அந்த சாலையை அவர் அமைக்கப் போகிறார்.…

பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதலில் மதரஸா அழிக்கப்பட்டதா: பிபிசி செய்தியாளரின் பயணம் #BBCExclusive

இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று  பாகிஸ்தான் அரசு, சில சர்வதேச ஊடகங்களின்…

பாலக்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதா? – பத்திரிகையாளர்களை அனுமதித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புதன்கிழமை) பாகிஸ்தான் அரசு, சில சர்வதேச…

இம்ரான் கான் – ‘திருப்பித் தாக்குவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இருந்திருக்காது’

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பிப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. சரியாக கையாண்டிருக்காவிட்டால், இந்நேரம் அந்த விவகாரம்,…

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் உறுதியான வெற்றி இருக்க வாய்ப்பில்லை – வாக்குப் பதிவுக்குப் பிந்திய கணிப்பு

இஸ்ரேல் பொதுத்தேர்தலில் யாரும் உறுதியான வெற்றியைப் பெற வாய்ப்பில்லை என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் மையவாத புளூ மற்றும் வெள்ளை கூட்டணி 36…

ஹாங்காங்: பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ‘அம்ப்ரல்லா’ போராட்டக்காரர்களுக்கு எதிராக தீர்ப்பு

நகரில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு கோரிக்கை விடுத்து உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் பங்கேற்றதால், பொது மக்களுக்கு இடையூடு ஏற்படுத்திய குற்றவாளிகள் என ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் 9 பேருக்கு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,…

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை…

துபாயில் பிரிட்டிஷ் பெண்ணுக்கு சிறை: முன்னாள் கணவரின் மனைவியை ‘குதிரை’ என ஃபேஸ்புக்கில் திட்டியதால் வந்த வினை – மற்றும் பிற செய்திகள்

தனது முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என்று ஃபேஸ்புக்கில் திட்டியதற்காக பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு வருட சிறை தண்டனையை எதிர்கொள்கிறார். லண்டனை சேர்ந்த 55 வயது லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின்…

பிரிட்டனின் முதல் கறுப்பின முஸ்லிம் பெண் கால்பந்து நடுவர்

முதன்முதலில் நான் கால்பந்து ஆட்ட நடுவரானபோது விளையாட்டு வீரர்கள் என்னை பார்த்த விதம் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது என்கிறார் ஜவஹிர் ரோப்ளே. இவர்தான் பிரிட்டனின் முதல் கறுப்பின, முஸ்லிம், ஹிஜாப் அணியும் பெண் நடுவர்.…

தென்னாப்பிரிக்காவில் காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவர் சிங்கத்துக்கு இரையான பரிதாபம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசியப் பூங்காவில், காண்டாமிருகங்களை வேட்டையாடச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் யானை ஒன்றால் நசுக்கிக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலை சிங்கக் கூட்டம் ஒன்று உண்டுவிட்டது. அவர் கொல்லப்பட்ட செய்தியை அவருடன்…

‘பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது’

தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.…

மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுடன் நெருக்கமாக விரும்பும் கட்சிக்கு வெற்றிமுகம்

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் இப்ராஹிம் முகமத் சாலியின் கட்சி மாபெரும் வெற்றிப் பெரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 80ல் 60 இடங்களை வெல்லும் என…

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள், எலிகள் எகிப்தில் கண்டெடுப்பு மற்றும் பிற செய்திகள்

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட (மம்மி) எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் எகிப்திலுள்ள சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் கிடைத்துள்ளது. இரண்டு மனித…

தனது குழந்தைகளை கொன்றவரை மன்னித்த தாய் – ருவாண்டா இனப்படுகொலையில் நெகிழ்ச்சி கதை

1994ல் நடந்த ருவாண்டா இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பியவர் ஆனி-மேரி. தனது இரண்டு குழந்தைகளை கத்தியால் கழுத்து அறுத்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை முதலில் கொலை செய்ய எண்ணினார். ஆனால், அவரை மன்னித்துவிட கத்தோலிக்க…

வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் இரான் – 70 பேர் பலி

இரானின் சமீப கால வரலாற்றில் இந்த வெள்ளம் எதிர்பாராதது. இரானின் 23 மாகாணங்களை பாதித்துள்ள இந்த வெள்ளம் வழக்கத்துக்கு மாறானது. தற்போதைய வெள்ளம் நீண்ட வறட்சிக்குப் பிறகு வந்துள்ளது. அதனால் பொதுமக்களும் அரசும் அதிர்ச்சி…

போயிங் நிறுவனத்தின் 737 ரக விமானத்தின் தயாரிப்பு குறைப்பு மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான 737 ரக விமானத்தின் உற்பத்தி தற்காலிகமாக குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நடந்து வரும் ஏப்ரல் மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து 737…

அமேசான் நிறுவனர் விவாகரத்து – 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள…

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் தலைகீழாக விழுந்ததை நிறுத்த இயலாத விமானிகள்

கடந்த மாதம் தரையில் மோதி விபத்திற்குள்ளான எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம், தரையில் மோதுவதற்குள் பல முறை கர்ணம் அடித்து விழுந்துள்ளது என்று முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது. மோதுவதற்கு முன்னர், போயிங் நிறுவனம் வழங்கிய…

வெள்ளத்தில் சிக்கியபின் மாமரத்தில் குழந்தையை ஈன்றெடுத்த தாய் மற்றும் பிற செய்திகள்

இடாய் சூறாவளி காரணமாக மத்திய மொசாம்பிக்கில் இருந்து வெள்ளத்தில் இருந்து தப்பி, மாமரத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார். அமெலியா தனியாக வாழ்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது தனது இரண்டு…

இரட்டையரில் யார் குழந்தைக்குத் தந்தை? அறிவியலே குழம்பிய விநோத வழக்கு

பிரேசிலில் இரட்டையரான சகோதரர்களில் ஒரு குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததாலும், அந்த இருவரில் உண்மையான தந்தை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ளாததாலும் நீதிபதி ஒரு விநோதத் தீர்ப்பு வழங்கினார். அந்த இரட்டையரில் யார்…

ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம் புரூனேவில் நிறைவேறியது

புருனேவில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. புருனேவின்…

பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த ‘ரோமியோ’ தவளைக்கு `ஜூலியட்’ கிடைத்தது மற்றும் பிற செய்திகள்

நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்தது. ரோமியா எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி…

இந்த ஸ்மார்ட் குப்பைத்தொட்டி என்ன செய்யும் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. இந்த ஸ்மார்ட் குப்பைத் தொட்டி அளிக்கும் தகவல்களை முதலாக கொண்டு உணவகங்கள், தங்குமிடங்களில் உணவுப் பொருட்கள் வீணாவதை குறைக்க…