Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

அமெரிக்காவில் வாழ்வு தேடிப் போனபோது வாழ்வு முடிந்த தந்தை, மகள்: ஒரு தாயின் கண்ணீர்

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற எல் சல்வேடார் நாட்டை சேர்ந்த 25 வயதான ஒருவரும், அவரது 23 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனர். அமெரிக்க குடியேற்றம்: உலகை உலுக்கும் மற்றொரு புகைப்படம் –…

தற்கொலை செய்ய இருந்த ‘ஆணின் உயிரைக் காப்பாற்றிய’ ஃபேஸ்புக் குழு

ஆண்களுக்கு மன ரீதியாக உதவி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் குழு ஒன்று தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக கூறியுள்ளது. ‘மேன் சாட் அபர்தீன்’ (Man Chat Aberdeen) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக்…

டிரம்பின் – கிம் சந்திப்பு: வட கொரியாவின் அணு ஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தை?

வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார். ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென…

9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி புற்றுநோயால் உயிரிழப்பு மற்றும் பிற செய்திகள்

நியூயார்க்கில் நடைபெற்ற 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், உடல்நிலை சரியில்லாமல் போனவர்கள், அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்துவந்த நியூயார்க் காவல் துறையை சேர்ந்த துப்பறிவாளர் உயிரிழந்தார்.…

அமெரிக்க-சீன வர்த்தகப்போர்: பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு

உலகப் பொருளாதார மந்த நிலைக்கு வித்திட்ட நீண்ட சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் இசைந்துள்ளன. ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க…

‘எனது இடத்தை நிரப்பும் பெண் அழகாக இருக்க வேண்டும்’ – தலாய் லாமாவின் சர்ச்சை பேச்சு

ரஜினி வைத்தியநாதன் பிபிசி நியூஸ் பூமி பந்தில் இவர் மிகவும் அறியப்படுபவர் என்பதில் சந்தேகமில்லை. பிரபலமானவர்கள் வணங்கப்பட்ட காலத்தில், இறைநம்பிக்கையின் தலைவராக இருந்த தலாய் லாமா, ஆன்மிக நட்சத்திரமாக விளங்குகிறார். 84ஆவது பிறந்த நாளை…

ருவாண்டா இனப்படுகொலை நினைவுகள்: “என்னை பாலியல் வல்லுறவு செய்தனர், என் மீது சிறுநீர் கழித்தனர்”

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில விஷயங்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஓர் பெண்ணின் 24 வயது மகன், தன்னுடைய பிறப்பு சூழ்நிலை பற்றி எப்படி அறிய வந்தார் என்பதை…

வடகொரிய அதிபர் கிம்மை திடீரென சந்திக்க அழைத்த டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

வட மற்றும் தென்கொரியாவை பிரிக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தன்னை சந்திக்க வடகொரிய அதிபர் கிம்முக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு பிறகு டிரம்ப் தென்…

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவு

மேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், வெப்பநிலை பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து, முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, மிக…

இந்தியா விதிக்கும் வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், இந்தியா அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கு…

சசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியாவின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி?

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் பப்புவா நியூ கினியாவின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16…

கிரீன்லாந்து பனிவிரிப்பின் கீழ் பதுங்கியுள்ள ஏரிகள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக நான்கு ஏரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அண்டார்டிகாவில் உள்ள பனி விரிப்பின் கீழ் சுமார் 470 ஏரிகள்…

வெடிகுண்டு மிரட்டல் – லண்டனில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலால் லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப் பட்ட்து. ஏஐ 191 விமானம் மும்பையிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூவாக்கிற்கு சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்கிய…

அமெரிக்க குடியேற்றம்: அதிர்ச்சியில் ஆழ்த்திய உயிரிழந்த தந்தை – மகளின் புகைப்படம் – என்ன நடக்கிறது?

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள படங்கள் உங்கள் மனதை புண்படுத்தலாம். அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை – மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம்…

இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் – என்ன காரணமா? மற்றும் பிற செய்திகள்

‘வெப்பம்’ இந்தியாவில் மட்டுமல்ல ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில்…

எத்தியோப்பியாவின் இந்த நகரத்தில் மசூதி கட்ட தடை- இது தான் காரணம்

பழமைவாய்ந்த நகரமான ஆக்சம் கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இறைவனால் மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட 10 கட்டளைகள் துறவிகள் பாதுகாப்பின் கீழ் அங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த நகரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக மசூதி கட்டவேண்டும் என…

பிலிப்பைன்ஸ்: “பணம் வேண்டும், வேறு என்ன செய்ய?” – குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் பெற்றோர்

குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை காணொளி எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது.…

அமெரிக்கா: இ-சிகரெட்டால் பிரச்சனை இல்லையென்று யார் சொன்னது? மற்றம் பிற செய்திகள்

இ-சிகரெட்டால் பிரச்சனை இ- சிகரெட் உடல் நலத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரியும் வரை அதன் விற்பனையை தடை செய்வதாக அமெரிக்காவில் முதல் முதலாக சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணம் உத்தரவிட்டுள்ளது.…

அழுதால் வாழ்க்கை நன்றாக இருக்கும் – ஏன் தெரியுமா?

அழுகையில் வலியை போக்கும் ஹார்மோன்கள் உள்ளன. எனவே சில சமயங்களில் அழுவது நமக்கு ஆறுதலாக இருக்கும். நமது அழுகை மூன்று வகைப்படும். ரிப்லெக்ஸ் அழுகை கண் எரிச்சலை குணப்படுத்தும்; பசல் வகை அழுகை உயவூட்ட…

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை…

நெதர்லாந்து – நாடெங்கும் 4 மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு – ஹேக்கிங் செய்யப்பட்டதா? மற்றும் பிற செய்திகள்

‘தொலைத்தொடர்பு துண்டிப்பு’ நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏதோவொரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் முற்றாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்தது.…

‘நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை’

கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை. இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்கிறது ஏஎன்ஐ செய்தி முகமை. இந்தாண்டு…

அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா? தெளிவுபடுத்தும் ஆய்வு முடிவுகள்

முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல்,…

இயற்கையின் மகோன்னதம்: புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகால பழமையான நடைப்பாலம்

இயற்கையின் மகோன்னதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. அதன் அற்புதம் சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியது. அப்படியானதுதான் இந்த புல் பாலமும். வெறும் புற்களை கைகளால் நெய்து செய்யப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. பெரு நாட்டில்…

விமானத்தில் உறங்குபவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகதான் மற்றும் பிற செய்திகள்

விமானத்தில் உறக்கம் விமானத்தில் அனைவரும் உறங்குவது வழக்கம்தானே? அதுபோலதான் அந்த பெண்ணும் உறங்கி இருக்கிறார். விமானம் தரை இறங்கிய பின்னும் அவர் எழவில்லை. அவரை யாரும் எழுப்பவும் இல்லை. விமானப் பணி ஊழியர்கள் உட்பட,…

இரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்

இரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது இந்த தாக்குதல் ராக்கெட் மற்றும்…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு டிரம்ப் எழுதிய ’அழகிய’ கடிதம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த கடிதம் ’மிகச்சிறந்த` ஒன்று என்றும், அதில் உள்ள ‘சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து யோசிக்கவுள்ளதாகவும்’ கிம்…

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் புதிய தலைவர் ஃபையஸ் ஹமீத் யார்?

பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவ உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயின் (இன்டர் சர்வீசஸ் இண்டெலிஜன்ஸ்) அடுத்த இயக்குநராகவும் லெஃப்டினண்ட் ஜெனரல் ஃபையஸ் ஹமீத் சென்ற வாரம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 18ஆம் தேதி வரை, இந்த பதவியில் அசிம்…

அமெரிக்கா – இரான் இடையே தீவிரமாகும் மோதல் மற்றும் பிற செய்திகள்

இரான் மீது கூடுதலாக தடைகள் இரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், இரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் அந்நாட்டின் மீது கூடுதலாக தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க…

சீனாவின் கட்டாய முகாம்களில் இருக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன?- உண்மையைத் தேடி பிபிசியின் பயணம்

சீனாவில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் பல லட்சம் முஸ்லிம் வீகர் இன மக்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணை ஏதுமின்றி முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.…

போர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் இரான் மொத்தமாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால், அணு…

நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்: இதுவரை காணாத புகைப்படங்கள்

பழமையான பொருட்களை சேகரிக்கும் ஒருவர் சில குறுந்தகடுகளை வாங்கி உள்ளார். ஆனால், வாங்கிய போது அவருக்கு தெரியவில்லை, தாம் வாங்கி இருப்பது ஒரு பொக்கிஷத்தை என்று. ஆம், அவர் வாங்கிய குறுந்தகட்டில் 2400 புகைப்படங்கள்…

கனடா: சுறா மீன் துடுப்பு வர்த்தகத்துக்கு தடை – அழிவிலிருந்து காக்கும் முயற்சி மற்றும் பிற செய்திகள்

சுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. இந்த தடையை விதிக்கும் முதல் ஜி20 நாடு கனடா என்ற பெயரையும் அந்நாடு பெறுகிறது. இது அழிவின் விளிம்பில் இருக்கும் சுறா…

அமெரிக்க உளவு விமானம்: மிகப்பெரிய தவறை இரான் இழைத்திருப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், இதுமனித தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம்…

அமெரிக்க நீதிமன்ற விவாதம்: குடியேறிகளின் குழந்தைகளுக்கு பற்பசை, சோப் வழங்கலாமா? மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேறிகளின் குழந்தைகளுக்கு பற்பசை மற்றும் சோப் கட்டிகள் ஆகியவற்றை பெற உரிமையுண்டா என்று அரசு வழக்கறிஞறொருவர் வினவியுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேறிகளை சுகாதாரமான சுகாதாரமான சூழலில்…

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இரான்: அதிகரிக்கும் பதற்றம் – என்ன நடக்கிறது?

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.…

ஹாங்காங்: போராட்ட நிலத்தில் அள்ளி கொடுக்கும் கொடை வள்ளல் – நிஜ சூப்பர்மேனின் கதை

ஹாங்காங்கின் பணக்கார மனிதரான லி கா-ஷிங் சீன பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டதாரி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார். லி கா-ஷிங் தொண்டு நிறுவனம் ஷாண்டோ பல்கலைக்கழகத்தில் 2019ஆம் ஆண்டு வகுப்பில் சேரப்போகும்…

கிம் ஜாங் உன் – ஷி ஜின்பிங் சந்திப்பால் வட கொரிய அணு ஆயுத பயன்பாட்டில் மாற்றம் நேருமா?

சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். வட கொரியாவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. 2005ஆம் ஆண்டிலிருந்து சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு…

தடுப்பூசி ஏன் போட வேண்டுமா? – தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஏன் தடுப்பூசி போட வேண்டுமா? – தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து 140 விநாடிகளில் விளக்குகிறது இந்த காணொளி. தடுப்பூசி குறித்து நிச்சயம் இதுவொரு புரிதலை வழங்கும். பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி…

இமாயல பனிமலைகள் – பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து மற்றும் பிற செய்திகள்

இமாலய பனிமலைகளில் மிகப்பெரிய அளவில் பனி உருகி வருவது பனிப்போரின் போது உளவுப்பார்க்க பயன்படுத்த செயற்கைக்கோள்களின் புகைப்படத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உளவுப்பார்க்கும் திட்டத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமீபத்திய விண்வெளி ஆய்வுகளையும் ஒப்பிட்டு, கடந்த…

பருவநிலை மாற்றம்: விமான பயணத்திற்கு எதிரான இயக்கம் – ‘பறத்தல் அவமானம்’

விமானத்தில் பயணிப்பது இங்கு பலருக்கு அறம் சார்ந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதற்கு காரணம் பருவநிலை மாற்றம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் விமானங்கள் வெளிப்படுத்தும் பசுமைக்குடில் வாயு. சுவீடன் மக்கள் வாழ்வில் இது…

ஜப்பான் நாட்டை கலக்கும் ஓர் அட்டகாச இசை குழு- ‘உடற்பயிற்சியும், இன்னிசையும்’

ஜப்பான் இசை குழு தினமும் கடினமான உடற்பயிற்சி செய்கிறது, ஒரு நாளுக்கு பத்து கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது. கூடவே இன்னிசையும் வழங்குகிறது. அவர்கள் வாழ்க்கை முறையும் வித்தியாசமாக இருக்கிறது. . பிற செய்திகள்:…

எம்.ஹெச் 17 மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் இவர்கள்தான்

கிழக்கு உக்ரைனில் 2014ல் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட்…

ஜமால் கஷோக்ஜி வழக்கு: ‘சௌதி இளவரசர் விசாரணையை சந்திக்க வேண்டும்’

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததாக ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த…

வர்த்தக போர்: ஜி20 மாநாட்டுக்கு முன்பு அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை – டிரம்ப்

அடுத்த வாரம் நடக்கவுள்ள ஜி20 மாநாட்டில் அமெரிக்காவும், சீனாவும் தங்களின் வர்த்தக பேச்சை தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாக நல்ல முறையில்…

உடல் ‘ஊனத்தை’ வென்ற ஒரு பெண்ணின் தன்னம்பிக்கைக் கதை

உடல் குறைபாட்டை வென்று உடல் பயிற்சி நிலையத்தை தொடங்கிய ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை வெற்றிக் கதை. பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com

ஹாங்காங்கில் நடப்பது என்ன – அதிகாரத்தை பணியவைத்த மக்கள் போராட்டம்

ஹேலியர் சுயூங் பிபிசி செய்தியாளர் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய இரண்டு போராட்டங்களைக் ஓரு வாரத்திற்குள் ஹாங்காங் கண்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு மிகவும் வன்முறையான போராட்டம் ஆகும். இந்த போராட்டங்களை…

தண்ணீர் பிரச்சனை: சிங்கப்பூர் நீரின்றி தவித்தபோது என்ன செய்தது தெரியுமா?

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை…

ஜஸ்டின் ட்ரூடோ: சர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இது…

ஹாங்காங்: மக்கள் போராட்டம், மன்னிப்பு கோரிய தலைவர் கேரி லேம்

ஹாங்காங்கில் போராட்டத்திற்கு காரணமான குற்றவாளி என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதாவை கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கோரினார் ஹாங்காங் தலைவர் கேரி லேம். போராட்டம் செய்த மக்கள் இந்த மசோதாவை திரும்ப…

Mission News Theme by Compete Themes.