Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

அமெரிக்காவை உலுக்கும் கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: டிரம்ப் ‘வன்முறை பதிவு’

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு…

இந்தியாவுடன் மோதுகிறதா நேபாளம்? சீனா ஆதரவு காரணமா?

இந்தியாவுடன் மோதுகிறதா நேபாளம்? சீனா ஆதரவு காரணமா? கடந்த சில வாரங்களாக இந்தியாவுடன் எல்லை தொடர்பான பிரச்சனைகளை நேபாளம் எழுப்பி வருகிறது. Source: BBC.com

லடாக் விவகாரம்: “நரேந்திர மோதி மகிழ்ச்சியாக இல்லை ” – டிரம்ப்

இந்தியா, சீனா இடையே லடாக் பகுதியில் தொடரும் மோதல் நிலை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி “மகிழ்ச்சியாக இல்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப்…

ஆஸ்திரேலியாவில் முர்டோச் நிறுவனத்தின் 112 செய்தித் தாள்கள் இனி அச்சாகாது

ஏற்கெனவே நசிவை சந்தித்து வந்த இந்திய ஊடகத் துறையில் கொரோனா முடக்க நிலைக்குப் பிறகு ஆட்குறைப்பு குறித்த செய்திகள் தினசரி வெளியாகின்றன. தமிழ்நாட்டில்கூட சின்னஞ்சிறு செய்தித் தாள்கள் சில சத்தமில்லாமல் அச்சு வடிவத்தை நிறுத்திவிட்டு…

சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்கும் நோக்கத்தை கொண்ட செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளத்தில் பதியப்படும் உள்ளடக்கங்களை…

நரேந்திர மோதியிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்: ‘என் புறாவை திருப்பித் தாருங்கள்’

இந்தியாவில் உளவு பார்த்ததாக கூறி பிடித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள புறா ஒன்று தன்னுடையது என்றும் அதை தம்மிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிய கிராமவாசி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை…

இரானில் பெண்ணை முத்தமிடுவது போல காணொளி வெளியிட்ட சாகச விளையாட்டு வீரர் கைது

இரானில் பெண்ணை முத்தமிடுவது போல காணொளி வெளியிட்ட சாகச விளையாட்டு வீரர் கைது ஆபத்தான பார்க்கோர் சாகச பிரபலம்தான் அலிரேஸா. இவரின் பல சாகசங்கள் உயிரிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. Source: BBC.com

நாசா & ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் ராக்கெட் – என்ன ஆனது? மற்றும் பிற செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதல் சுற்றுவட்ட பயணமாக…

பாகிஸ்தானில் இறந்தபின்னும் வசவு வாங்கும் பெண் மாடல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை பாகிஸ்தானில் இறந்தபின்னும் வசவு வாங்கும் பெண் மாடல் 5 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் மே 22ஆம் தேதி நடந்த விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்படும் சாரா அபீத்…

செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது?

செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது? பிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர்…

இந்தியா – மலேசியா இடையே மீண்டும் நெருக்கம்: பலனளிக்கும் பாமாயில் வர்த்தகம்

இந்தியா – மலேசியா இடையே மீண்டும் நெருக்கம்: பலனளிக்கும் பாமாயில் வர்த்தகம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவின் கருத்துகளால் இந்தியா சீற்றமடைந்தது. சில மாதங்களுக்கு…

இந்தியப் பெருங்கடல், 16 நாடுகள் – 12,000 கிமீட்டர் தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்

வியக்கத்தக்க 7500 மைல் பயணத்தை நிறைவு செய்கிறது குயில் இனப் பறவை ஒன்று. குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று தென் ஆப்ரிக்காவில் இருந்து மங்கோலியாவிற்கு சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும்…

நாய் போல பூனைகளும் உங்களை நேசிக்கிறதா? என்னவெல்லாம் செய்தால் பூனைகளுக்கு பிடிக்கும்?

பூனைகள் தங்கள் வாலை ஆட்டுகின்றனவா? அவற்றின் ரோமங்கள் எப்படி இருக்கின்றன? காதுகளை சுருக்கிக்கொள்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை வைத்தே அவற்றின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். செல்லப்பிராணிகளில் நாய்களுடன் நம்மால் நெருக்கமாக இருக்க முடியும். ஆனால்…

பாகிஸ்தான் விமான விபத்தில் இறந்ததாக கருதப்படும் பெண் மீது இணைய வசவுகள் ஏன்?

பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்படும்சாரா அபீத் என்ற ஒரு முன்னணி மாடல், ஒரு ‘ஒழுக்கக்கேடான வாழ்க்கையை’ வாழ்ந்ததாக இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சாராவின் உடை மற்றும் வாழ்க்கை முறையை…

இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் – ஏன்?

குடியரசு நாடுகளில் உள்ள பிரதமரோ அதிபரோ மக்களின் மனநிலையை உதாசீனப் படுத்த முடியாது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இந்திய அரசு நாட்டின் புது வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற செய்திகள்

மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி…

பாகிஸ்தானில் தொடரும் பாதாள சாக்கடை பணியாளர்களின் அவலம்

பாகிஸ்தானில் தொடரும் பாதாள சாக்கடை பணியாளர்களின் அவலம் “நான் இன்று கடுமையாக உழைக்கவில்லை என்றால், என் குழந்தைகள் நாளை இதே வேலையை செய்ய வேண்டி இருக்கும்“ என்று கண்ணீருடன் கூறுகிறார் பாகிஸ்தான் பாதாள சாக்கடை…

செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது?

பிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஓர் ஐரோப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள்…

இந்தியா – மலேசியா உறவு திடீரென மேம்பட்டது எப்படி?

இந்தியாவுடன் தனது இராஜீய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசியா பேசியுள்ளது. இந்தியா – மலேசியா இடையில் அண்மையில் ஏற்பட்ட சமையல் எண்ணெய் ஒப்பந்தத்தை அடுத்து, தனது சமையல் எண்ணெயை அதிகம் வாங்கும்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா? #BBCRealityCheck

ஸ்ருதி மேனன், பீட்டர் மவாய் பிபிசி ரியாலிட்டி செக் அணி கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா…

அமெரிக்காவில் படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள் – மனிதர்களுக்கு ஆபத்தா? மற்றும் பிற செய்திகள்

பெரும்பாலும் மண்ணுக்கு அடியில் வாழும் சில்வண்டு வகை ஒன்று 17 ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக்காலத்தின் தொடக்கத்தில் விரிஜீனியாவின் தென் மேற்கு பகுதி, கலிஃபோரினியாவின் வடக்கு பகுதி…

ஆப்கானிஸ்தான்: பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் – நடந்தது என்ன?

ஆப்கானிஸ்தான்: பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் – நடந்தது என்ன? ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றின் மீது ஆயுதத்தாரிகள் நடத்திய தாக்குதலில் அதற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை ஒன்றின் மீது இரண்டு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

உங்களோடு வரிசையில் நிற்கும் ஒருவர் திடீரென தும்மினால், அது உங்களுக்கு எந்த அளவிற்கு ஆபத்தாக அமையும்? நீங்கள் உணவு விடுதிக்குப் போகலாமா? அரசின் பேருந்து அல்லது ரயில் சேவையை பயன்படுத்தலாமா? உலக நாடுகள் பலவும்,…

ஹாங்காங் போராட்டம்: சீனாவின் புதிய சட்டம் – எதிர்க்கும் மக்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் காவல் துறை

ஹாங்காங்கில் சீனா கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு போலீஸார் தாக்கி வருகின்றனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்…

காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் சிகிச்சைஸ்டின் அனுபவம்

பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக…

இந்தியா-சீனா எல்லை தகராறு: அக்சாய் சீனா முதல் அருணாச்சல் வரை பதற்றத்திற்கான காரணம் என்ன?

குர்பிரீத் சைனி பிபிசி நிருபர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…

இரண்டாம் உலப்போர் குண்டுவீச்சில் தப்பித்த முதலை இறந்தது

ஜெர்மனியில் பெர்லின் நகரில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நிகழ்ந்த குண்டு வீச்சில் தப்பித்த முதலை ஒன்று தற்போது இறந்துவிட்டது. இந்த முதலை நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று ஒரு காலத்தில் புரளி…

முடக்க நிலைக்கு எதிராக ஸ்பெயினில் நடந்த தேர் ஓட்டும் போராட்டம் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து கார் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயினில் இயங்கும் தீவிர வலதுசாரி கட்சியான வாக்ஸ் கட்சி நாட்டில் உள்ள முக்கிய…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தென் கொரியா திறம்பட செயல்பட ஒட்டகம் காரணமா?

கொரோனா வைரஸ்: தென் கொரியா திறம்பட செயல்பட ஒட்டகம் காரணமா? உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதை திறம்பட கையாளும் நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில்,…

பாகிஸ்தான் விமான விபத்து: உயிர் பிழைத்தவரின் அனுபவம் – நெகிழ்ச்சி பகிர்வு

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்தவர், தன்னால் “கரும்புகையை மட்டுமே சுற்றிலும் பார்க்க முடிந்தது” என்று கூறினார். பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் கராச்சியில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): `வணக்கம் முதல் தேநீர் வரை` – உலக தலைவர்கள் தங்களை எவ்வாறு மாற்றிக் கொண்டனர்?

பெருந்தொற்று உலகம் முழுவதும் பலரின் அன்றாட வாழ்க்கையிலும் பணியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பல விஷயங்களை உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்து…

பாகிஸ்தான் விமான விபத்தின் கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சி – விழுந்து நொறுங்கிய விமானம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை பாகிஸ்தான் விமான விபத்தின் சிசிடிவி காட்சி – விழுந்து நொறுங்கிய விமானம் ஒரு நிமிடத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம்…

அமெரிக்காவில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தான் ஏதேனும் உணவு…

“கொரோனா வைரஸால் சீனா இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை “கொரோனா வைரஸால் சீனா இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை” 4 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி தற்போது…

டென்மார்க் – சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்கும் பள்ளிகள் – சாத்தியமானது எப்படி?

டென்மார்க் – சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்கும் பள்ளிகள் – சாத்தியமானது எப்படி? டென்மார்க் பள்ளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாதித்து காட்டியுள்ளனர். மற்ற நாடுகளைக் காட்டிலும் தனது ஆரம்ப பள்ளிகளை சற்று முன்பே…

பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க…

சௌதி அரேபியா மோசமான நிதி சிக்கலில் இருக்கிறதா? – விரிவான அலசல்

சௌதி அரேபியா மோசமான நிதி சிக்கலில் இருக்கிறதா? – விரிவான அலசல் எண்ணெய் வருமானம் ஒன்றை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல் பொருளாதாரத்தை பல வகையிலும் பரவலாக்கும் பெரிய திட்டம் ஒன்றின் கீழ் ஒளிமயமான எதிர்காலம் வருமென்று…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): அமெரிக்காவில் ஒருபுறம் பட்டினி மறுபுறம் உணவு பொருட்கள் அழிப்பு

உலகின் வலிமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பட்டினி பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால், மே 22ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 95 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்த…

அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்ற இரானிய எண்ணெய் கப்பல்களுக்கு வெனிசுவேலா பாதுகாப்பு மற்றும் பிற செய்திகள்

இரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், இரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது. அந்து எண்ணெய் கப்பல்கள், விரைவில் வெனிசுவேலா வரவுள்ளன. இந்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கு: தாய்க்கு பிரியாவிடை அளித்த பிபிசி செய்தியாளர் – இறுதி நொடிகள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு: தாய்க்கு பிரியாவிடை அளித்த பிபிசி செய்தியாளர் – இறுதி நொடிகள் மரணப்படுக்கையில் தாய், நேரில் செல்ல முடியாத பிபிசி செய்தியாளர் – இறுதிக்கணம் எப்படி இருந்தது? ‘என் தாய் உயிரிழப்பதற்கு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) – பிரேசிலில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரஸ் – பிரேசிலில் என்ன நடக்கிறது? கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரிட்டனை விட பிரேசிலில் நிலைமை மோசமாக உள்ளதா? அங்கு என்ன நடக்கிறது? விளக்கத்திற்கு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தொற்று உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் தொற்று இல்லாத குழந்தைகள்

சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் மும்பையில் ஒரு மருத்துவமனையில் 100க்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதும் நல்ல உடல் நலத்துடன் பிறந்துள்ளன. லோக்மான்ய திலக் அரசு பொது மருத்துவமனையில்…

கொரோனாவை நியூசிலாந்து எப்படி வீழ்த்தியது – ஒரு தமிழரின் அனுபவம்

கொரோனாவை நியூசிலாந்து எப்படி வீழ்த்தியது – ஒரு தமிழரின் அனுபவம் அமெரிக்கா போன்ற உலகின் வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில், கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறது நியூசிலாந்து. இது எப்படி சாத்தியமானது? Source: BBC.com

கொரோனாவால் தொழில்துறையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவாகுமா?

கொரோனாவால் தொழில்துறையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவாகுமா? கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் முதலீடு செய்து வந்த பல நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்து வருகின்றன. இது இந்தியாவுக்கு சாத்தியமாக அமையுமா?…

உம்பான்: கோரத் தாண்டவம் ஆடி கரையைக் கடந்த அதிதீவிரப் புயல் மற்றும் பிற செய்திகள்

அதிதீவிரப் புயலான உம்பான் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்கும் வங்கதேச நாட்டுக்கும் இடையே பயங்கர சேதத்தை விளைவித்தவாறு கரையை கடந்தது. குறிப்பாக, கடலோர பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழையினால் இதுவரை குறைந்தது 15…

கொரோனா முடக்கநிலைக்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

கொரோனா முடக்கநிலைக்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகில் பல நாடுகளிலும் அமலில் இருக்கும் முடக்கநிலை விலக்கப்பட்ட பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறது இக்காணொளி.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி – சிங்கப்பூரில் நிலவரம் என்ன?

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேருக்கு வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

புற்றுநோய் புகார்: குழந்தைகளுக்கான பொடி விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் பிற செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.…

கொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்?

கொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்? ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டில் சவப்பெட்டியை தூக்கி கொண்டு நடனமாடுகின்றனர். மிகவும் பிரபலமாக இருக்கும் இவர்கள் யார் என்பதை இக்காணொளி விளக்குகிறது.…

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்?

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்? அமெரிக்கா இத்தொற்றை சரியாக கையாளவில்லையா? இல்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பதை இந்தக் காணொளியில் விரிவாக பார்க்கலாம். Source: BBC.com