Go to ...
RSS Feed

செய்திகள்

வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் ஆர்யா – சாயிஷா

காதலர் தினத்தன்று ஆர்யா – சாயிஷா திருமண அறிவிப்பு வெளியான நிலையில், இருவரும் வெளிநாடுகளில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Arya #Sayyeshaa நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச்சில் திருமணம் நடக்க இருப்பதாக ஆர்யா சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், ஆர்யாவும், சாயிஷாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றி வருகிறார்கள். அங்கு ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோதே

திமுகவுக்கு தலைமை தாங்கும் தகுதி முக ஸ்டாலினுக்கு இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்

தி.மு.க.வுக்கு தலைமை தாங்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். #DindigulSrinivasan #MkStalin திண்டுக்கல் : மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. அரசின் சாதனை மற்றும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட

விஜய் படத்தில் பாட்டு பாடும் சூப்பர் சிங்கர் பிரபலம்

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63′ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே நயன்தாரா, பரியேறும் பெருமாள்’ கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்தொலைக்காட்சிசூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான கப்பீஸ் பூவையர் ஒரு முக்கிய கேரக்டரில்

புல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை- 4 வீரர்கள் மரணம்

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். #PulwamaEncounter ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும்

பிஎஸ்என்எல் வேலை நிறுத்தத்ம்: காரணமும் விளைவுகளும்!6 நிமிட வாசிப்புபொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சந்தித்துவரும் பிரச்சினைகள் என்ன?

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சந்தித்துவரும் பிரச்சினைகள் என்ன? இனியன் பிஎஸ்என்எல் ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் தொடங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை வழங்குதல், மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துதல் செல் கோபுரங்களின் பராமரிப்பைத் தனியாருக்கு அளிப்பதை எதிர்த்தல் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளோடு மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமாக அமையும் என்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு (AUAB) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவந்த நிலையில், இரண்டு மாதங்கள்

பராமரிப்பு பணி காரணமாக 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ரத்து

சென்னை தொடர் வண்டிகோட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, அரக்கோணம், கும்மிடிப் பூண்டி வழித்தடங்களில் பெரும் பாலும் சனி, ஞாயிறுகளில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. ஆனால், பயணிகளுக்கு போதிய அளவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களையும் இயக்குவதில்லை. ரத்து செய்யப்படும் வழித்தடங்களில் கூடுதலாக மாநகர பேருந்துகளையும் இயக்குவதில்லை. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பேருந்து சேவையும் குறைவுஇந்நிலையில் நேற்று பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில் காலை முதல்

தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள 11 இடங்களில் சேகரிப்பு மையங்கள்: ரூ.2 கோடியில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

வீடுகளில் பயன்படுத்திய பின் வெளியேற்றப்படும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள 11 இடங்களில் சேகரிப்பு மையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கொசுக்கள், கரையான், கரப்பான்பூச்சி, எறும்புகள் போன்றவற்றை அழிக்க பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு அதன் கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன. மேலும் உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் வெப்பமானிகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் டியூப் லைட்கள், சிஎஃப்எல் பல்புகள் போன்றவை உடையும்போது கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. அதேபோன்று பெயின்ட் வாளிகள், மின்கலவடுக்கு (பேட்டரி)கள், வீடுகள்

தமிழகத்தில் மேலும் 2 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏப்.10-ல் ஏலம்: மத்திய அரசு நடவடிக்கையால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

காவிரி டெல்டாவை உள்ளடக்கி நடைபெறவுள்ள ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான 3-வது சுற்று ஏலத் தில், தமிழகத்தில் 2 வட்டாரங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த 5 மாதங் களில் 3 சுற்றுகளாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறி விப்பை செய்துள்ளது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் இந்தியா முழுமைக்கும் 55 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலம் விடப்பட்டது. இவற்றில் தமிழக காவிரி

பாகிஸ்தான் மீது ராஜ்நாத் சிங் ஆவேசம்

தீவிரவாதத்தையும், அதன் நடவடிக்கைகளையும் ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாகவே, தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான தீவிரவாதிகள்அழிக்கப்பட்டனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளாகவே தீவிரவாதிகள் கடும் அதிருப்தியிலும்,

காஷ்மீரை அதிகாலையில் குலுக்கிய நில நடுக்கம்.. மக்கள் பீதி

  ALLOW NOTIFICATIONS   oi-Veerakumar | Published: Monday, February 18, 2019, 8:34 [IST] ஸ்ரீநகர்: காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இன்று அதிகாலை, 4.23 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆழமானது என்று இநத்ிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக

டெல்லியில் தமிழர்களுக்காக கல்லூரி தொடங்க தமிழக அரசு ஆலோசனை: தமிழ்நாடு இல்லத்தில் தமிழகத்தின் பேராசிரியர்களுடன் கூட்டம்

கடந்த 7-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளேட்டில் டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியரின் நான்கு பணியிடங்கள் பல வருடங் களாக நிரப்பப்படாமல் இருப்ப தாக செய்தி வெளியானது. இதன் தாக்கமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசு அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். டெல்லி பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றும் தமிழகத்தின் பேராசிரியர்கள், பதிவாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என சுமார் இருபது பேர் இதில்

பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ‘பாரத் கே வீர்’ இணையதளம் மூலம் நிதியுதவி: 36 மணி நேரத்தில் ரூ.7 கோடி அனுப்பிய பொதுமக்கள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய ஆயுதப் போலீஸ் படை பிரிவு (சிஏபிஎப்) பராமரிக்கும் வகையில், ‘பாரத் கே வீர்’ என்றபெயரில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணையதளம் தொடங்கப்பட்டது. பாதிக்கப்படும் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த இணைய தளம் தொடங்கப்பட்டது. அதன்பின், பாரத் கே வீர் இணையதளம் மூலம் கடந்த மாதம் வரை ரூ.45.32 கோடிக்கு மேல்பொதுமக்கள் நிதியுதவி அளித்துள்ளனர். ‘பிகேவி’ என்ற மொபைல் ஆப் அல்லது பாரத் கே வீர்

ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு: தூத்துக்குடியில் 1,600 காவல் துறையினர் குவிப்பு

ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1,600 காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். #Sterlite #Judgement #SupremeCourt தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு,

`இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கோவையில் `யாதும் தமிழே’ விழா கோலாகலம்- பிரம்மாண்ட விழாவில் தமிழ் அறிஞர்கள் கௌரவிப்பு

பாரம்பரியம் மிக்க `தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் `தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் செய்திகளை வழங்குவதுடன், மக்களை இணைக்கும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கிறது. அந்த வகையில், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொண்டாடும் `யாதும் தமிழே 2019’ என்ற புதுயுகத் தமிழின் புதுவிதக் கொண்டாட்டம் கோவையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிகர் கலைக் குழுவின் துள்ளலான பறை இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, எஸ்.எஸ்.வி.எம்.

வேட்டையை தொடங்கியது ராணுவம்.. காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு

  ALLOW NOTIFICATIONS   oi-Veerakumar | Published: Monday, February 18, 2019, 7:54 [IST] ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், இன்று அதிகாலை, தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். புல்வாமா மாவட்டத்தின் பின்க்ளான் என்ற பகுதியில், பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து 2 தீவிரவாதிகள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 14ம் தேதி, சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது

சென்னையில் அரிய இசைக் கருவிகளின் காட்சிக்கூடமான சங்கீத வாத்யாலயாவை டெல்லிக்கு இடம் மாற்றக் கூடாது: இசை ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் வேண்டுகோள்

சென்னையில் பண்டைய கால அரிய வகை இசைக் கருவிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ‘சங்கீத வாத்யாலயா’ கண்காட்சிக் கூடத்தை டெல்லிக்கு மாற்ற திட்டமிட்டிருப்பது, சென்னை இசை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதை டெல்லிக்கு மாற்றக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் உள்ள இசைக் கருவிகள் கண்காட்சிக் கூடம் ‘சங்கீத வாத்யாலயா’. பண்டைய அரிய வகை இசைக் கருவிகளைப் பாதுகாத்து, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும் நோக்கில் 1956-ல்தொடங்கப்பட்டது. சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் சாம்பமூர்த்தி என்ற இசை வித்வான்

சவப்பெட்டி ஊழலை போல ரஃபேலும் நீர்த்துப் போகும்- அதிமுக எம்.பி. மைத்ரேயன் சிறப்பு பேட்டி

கடந்த 2004 மக்களவைத் தேர்தலின்போது பாஜக மீது காங்கிரஸ் எழுப்பிய சவப்பெட்டி ஊழலை போல ரஃபேல் விவகாரமும் நீர்த்துப் போகும் என மாநிலங்களவை அதிமுக எம்.பி. மருத்துவர் எம்.மைத்ரேயன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் ‘இந்து தமிழ்’ நாளிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு: மத்திய அரசின் சாதனையாக நீங்கள் கருதுவது? உலக நாடுகள் பலவற்றுக்கும் பிரதமர் மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் காரணமாக, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தனி மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால்

டிக் டாக் தடை செய்யப்படுவது உறுதி: அமைச்சர்!3 நிமிட வாசிப்புடிக் டாக் செயலி தடை செய்யப்படுவது உறுதி எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்…

டிக் டாக் செயலி தடை செய்யப்படுவது உறுதி எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, பல்வேறு கலாச்சார சீர்கேடுகளுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் டிக் டாக் செயலி காரணமாக இருப்பதால் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவருக்குப் பதிலளித்த தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக்கைத் தடை செய்ய மத்திய

ஒரு கப் காபி6 நிமிட வாசிப்புமற்றவரை விட நான் ஒருபடி மேலான நிலையில் இருக்கிறேன் என்ற எண்ணம் இல்லாதவர் மிகக் குறைவு. அவ்வாறு எண்ணத் துணியாத மனச்சமநிலை க…

அன்பில் அப்நார்மல் கிடையாது! மற்றவரை விட நான் ஒருபடி மேலான நிலையில் இருக்கிறேன் என்ற எண்ணம் இல்லாதவர் மிகக் குறைவு. அவ்வாறு எண்ணத் துணியாத மனச்சமநிலை கொண்டவரையும் தாழ்வு மனப்பான்மையுற்றவராக சுற்றியிருப்பவர்கள் கருதும் சூழல் தற்போது பெருகி வருகிறது. நண்பர், உறவினர், வெறுமனே அறிமுகமானவர் என்று யாராக இருந்தாலும் இந்த ஓப்பீட்டைத் தொடர்ந்துகொண்டே இருப்பர் சிலர். நான் சாதாரண ஆளில்லை என்பதைச் சில நேரங்களில் தங்களது பேச்சிலும் வெளிப்படுத்துவர். இது எல்லாமே தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அண்ணாந்து பிரமிக்க

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதம்

விருத்தாச்சலம்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. திடீரென பெய்த மழையால் விற்பனைக்காக கொடுவரப்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். Source: Dinakaran

நெல்லை அருகே தீக்குளித்து படுகாயமடைந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியரையில் தீக்குளித்து படுகாயமடைந்த கர்ப்பிணி மகாலட்சுமி என்பவர் உயிரிழந்தார். குடும்ப பிரச்சனையால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த மகாலட்சுமி உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணியான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Source: Dinakaran

ஜப்பானில் குச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள் மற்றும் பிற செய்திகள்

ஜப்பானில் நடந்த பாரம்பரிய திருவிழா ஒன்றில், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இரண்டு புனித குச்சிகளை தேடும் போட்டியில் ஈடுபட்டனர். ஜப்பானின் ஒகாயாமாவிலுள்ள பிரபல புத்த மத ஆலயம் ஒன்றில் நடைபெற்ற இந்த திருவிழாவில், அரைக்கச்சைகளை அணிந்திருந்துக்கொண்டு சுமார் 10,000 ஆண்கள் பங்கேற்றிருப்பர் என்று கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புனித குச்சிகளை எடுக்க செல்வதற்கு முன், போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தண்ணீரில் மூழ்கி எழுகின்றனர். ‘சிங்கி’ என்றழைக்கப்படும் சுமார் 20 செ.மீ

பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம் – பள்ளியின் அங்கீகாரம் ரத்து

பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடியதால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மாகாண தனியார் பள்ளி பதிவு இயக்குனரகம் அறிவித்துள்ளது. கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாணவர்கள் சிலர் இந்திய பாடலுக்கு நடனமாடினர். அவர்களுக்கு பின்னால் இருந்த திரையில் இந்திய தேசிய கொடி காட்டப்பட்டது. இந்த காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

எப்படி இருக்கும் 2019 சம்பள உயர்வு?

ஒவ்வொரு ஆண்டும், நம் கவனத்தைக் கவர்வது, சம்பள உயர்வு தான். 2019ல் சம்பள உயர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?பொதுவாக, தனியார் நிறுவனங்களில், ஏப்., 1 முதல் புதிய சம்பளம் வழங்கப்படும். முந்தைய ஆண்டில், பணியாளர்கள் செய்த பங்களிப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு சம்பள உயர்வோ, பதவி உயர்வோ அளிக்கப்படும்.தொழில் சார்ந்த துறைகளில், சம்பள உயர்வு, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருக்கும். ஆனால், இதில் இருந்து வித்தியாசமானது, ஐ.டி., எனப்படும், தகவல்

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #MexicoCity மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் குவிண்டானா ரூ மாகாணத்தில் கரீபியன் கடலையொட்டி உள்ள கான்கன் நகர் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது அங்கு

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவி – பரிந்துரையில் இருந்து விலகினார் ஹீத்தர் நாவேர்ட்

ஐ.நா.வின் அமெரிக்க தூதருக்கான பரிந்துரையில் இருந்து தான் விலகுவதாக ஹீத்தர் நாவேர்ட் அறிவித்தார். #UNAmbassador #HeatherNauert வாஷிங்டன்: ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே கடந்த ஆண்டு தனது பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து அந்த பதவிக்கு உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் பெண் பத்திரிகையாளருமான ஹீத்தர் நாவேர்ட்டை ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் ஹீத்தர் நாவேர்ட்டுக்கு தூதரக பணியில் போதிய அனுபவம் இல்லை என கூறி

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் தோற்றுவிட்டது – மத்திய அரசு மீது மன்மோகன் சிங் தாக்கு

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்று விட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடி உள்ளார். #ManmohanSingh #EmploymentOpportunities புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும்

2 நாள் பயணமாக சவுதி இளவரசர் சல்மான் நாளை இந்தியா வருகை

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2 நாள் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India புதுடெல்லி: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்

டெல்லி-வாரணாசி இடையே வர்த்தக ரீதியான பயணத்தை தொடங்கியது ‘வந்தே பாரத்’ தொடர் வண்டி

வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. #VandeBharatExpress #Delhi #Varanasi புதுடெல்லி: நாட்டின் முதல் அதிவேகமான ரெயிலை சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்தது. என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டமாக டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு சென்ற

கூட்டத்தில் ஜெட்லி பங்கேற்கிறார் ரூ.28,000 கோடி டிவிடெண்ட் மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி) இன்று முடிவு?

புதுடெல்லி: மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி)யின் மத்திய வாரிய கூட்டத்தில், நிதியமைச்சர் அருண்ஜெட்லி இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து இன்று பேசுகிறார். அப்போது, மத்திய அரசுக்கு மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி) ரூ.28,000 கோடி இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி)யிடம் இருந்து மத்திய அரசு உபரி நிதி கேட்டு வருகிறது. இது பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் கண்டனம்

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PulwamaAttack #Israel #Plaestine ஜெருசலேம்: காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளனர். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ தனது டுவிட்டர் தளத்தில், ‘அன்பு

திமுக முன்னாள் எம்.பி. கா.ரா.சுப்பையன் மறைவு

கோவை:  கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்தவர் கா.ரா.சுப்பையன் (82). இவர் கடந்த 2000-2002ம் ஆண்டில் மேலவை எம்.பி.யாக இருந்தார். தற்பொழுது தி.மு.க. தீர்மான குழு செயலாளராக இருந்து வந்தார். இவர், உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் காலமானார். இதையடுத்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டது. திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, ராசா, முன்னாள் எம்.பி.க்கள் விடுதலை

புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதியை புகழ்ந்த காஷ்மீர் மாணவர் கைது

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அதில் அமகது தாரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காஷ்மீர் மாணவனை இமாசல பிரதேச காவல் துறையினர் கைது செய்தனர். #Pulwamaattack ஷிம்லா: காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தசீன் குல் என்ற மாணவர் இமாசலபிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அதில் அமகது தாரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை போட்டிருந்தார். இது பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூன்று குழந்தைகளின் முன்னிலையில் பிரான்ஸ் நாட்டு தம்பதிக்கு தமிழ் முறைப்படி திருமணம்: மணக்கோலத்துடன் மதுரையில் நகர்வலம்

மதுரை: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதி, தங்கள் 3 குழந்தைகள் முன்னிலையில் தமிழ் முறைப்படி மதுரையில் நேற்று மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரை சேர்ந்தவர் பிலிப் (50). இவரது மனைவி ஆஸ்ட்ரிச் (40). இவர்கள் 20 வருடங்களுக்கு முன்பு பிரான்சில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிலிப் ஆயுர்வேத மருந்துகளை அங்கு விற்பனை செய்து வருகிறார். ஆண்டுதோறும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.

உயர் கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை உயர்வு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதத்தில் தமிழகத்துக்குதான்  முதலிடம். தமிழகத்தை பொறுத்தவரை 509 கல்லூரிகளில் சேர்க்கை நடக்கிறது. இக்கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையை கூடுதலாக்க அனுமதி பெற்றுள்ளனர். இதனால் நிகர்நிலை பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் விரும்புவதாலும்,

தஞ்சை அருகே பரிதாபம் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது தேர்(கார்) மோதியதில் 2 பேர் பலி

தஞ்சை: திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி(56). புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கருப்பையா(55). புதுக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(65). இவர்கள் மூவரும் தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தங்களது உறவினர் வீட்டின் திருமணத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். திருமணம் முடிந்த பின்னர் ஊருக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் நின்றனர். அப்போது தஞ்சையில்

அரசுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் விளம்பரம் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்

சேலம்: ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது அரசுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் விளம்பரம் செய்ததாக முள்ளுவாடி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த மாதம் போராட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பணியிடைநீக்கம் நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்நிலையில், சேலம் முள்ளுவாடி கேட்

பிரசல்ஸ் நகரில் இருந்து சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு தெரசா மே உருக்கமான கடிதம்

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில், தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். #Brexit #TheresaMay லண்டன்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தியது. பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர்

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை

வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. #DonaldTrump #NobelPrize வாஷிங்டன்: அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த

கோவை ஞானி, பா.வெங்கடேசன், விக்ரமாதித்தியனுக்கு தமிழ் திரு விருதுகள்

கோவையில் இன்று (பிப்ரவரி 17) , இந்து தமிழ் திசை நடத்தும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து, தமிழ் திரு விருதுகள் வழங்கும் நிகழ்வோடு நிறைவுற்றது. நடுப்பக்க ஆசிரியர் சமஸ் தமிழ் திரு விருதுகள் பெறுவோரை அறிவித்தார்.  அப்போது அவர் பேசியதிலிருந்து: கடந்த 2017- தமிழ்த்திரு அறிவித்தபோது இரண்டு விஷயங்களை சொன்ன அதே கருத்தைச் சொல்கிறேன். தமிழ் நாளிதழ், தமிழ் சமூகம் மக்கள் நலன் சார்ந்த படைப்பாளிகளை புறக்கணிக்கும் கோபத்திலிருந்து எழுந்ததே இந்த விருது. பா.வெங்கடேசன்

முற்றிலும் மாறுபட்ட ஒன்றைத்தர வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு: இந்து தமிழ் திசை ஆசிரியர் பேச்சு

முற்றிலும் மாறுபட்ட  ஒன்றைத்தர வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என  ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் அசோகன் பேசினார். பாரம்பரியம் மிக்க `தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் `தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் செய்திகளை வழங்குவதுடன், மக்களை இணைக்கும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கிறது. அந்த வகையில், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொண்டாடும் `யாதும் தமிழே 2019’ என்ற புதுயுகத் தமிழின் புதுவிதக் கொண்டாட்டம் கோவை அவிநாசி சாலையில், நவ இந்தியா பகுதியில் உள்ள

தமிழ்த்திரு விருதுகள் ஏன்? -ராஜுமுருகன்

குக்கூ, ஜோக்கர் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் மூன்றாவது படமாக ஜிப்சி படத்தை இயக்கியுள்ளார். அது விரைவில் திரைக்கு வர உள்ளது. தமிழ்த்திரு விருதுகள் ஏன் வழங்கப்படுகிறது என்பது குறித்து இயக்குனர் ராஜ முருகன் பேசியதாவது: தமிழ்த்திரு விருதுகள் வழங்கப்படுவதை ஒரு பெருமையான அடையாளமாக கருதுகிறேன். சின்ன வயதில் எங்கள் சொந்த ஊரில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளேன். எங்கள் ஊரில் ஒரே ஒருவர்தான் இந்துப் பத்திரிகை வாங்குவார். அவருக்கு ஆங்கிலம் தெரியுமா என்று எனக்கு

‘‘காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை அசாம் மாநிலத்துக்கு வர விடமாட்டோம்’’ – அமித் ஷா பேச்சு

காஷ்மீர் மாநிலம் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது போன்ற நிலை அசாம் மாநிலத்துக்கு வர அனுமதிக்க மாட்டோம் என பாஜக தலைவர் அமித் ஷா பேசினார். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு இருதினங்களுக்கு முன்பு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட தேரை (காரை) மோதச் செய்து ஜெய்ஷ்- இ-

காவல் நிலையம் எதிரே தேரை (காரை) நிறுத்தி மது அருந்திய கும்பல்: கருங்கலில் பட்டப்பகலில் பரபரப்பு

கருங்கல்: கருங்கல் காவல் நிலையத்தின் எதிர்புறம் நேற்று பகல் வேளையில் கேரள பதிவெண் கொண்ட சொகுசு தேர்(கார்) ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் காரில் இருந்த கும்பல், மது பாட்டில்களை திறந்து மது அருந்த ஆரம்பித்தனர். இதை கண்ட பொதுமக்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் தேரை (காரை) நிறுத்தி மதுஅருந்துகிறார்களே என்று முகம் சுளித்தனர். இதையடுத்து அவர்கள் கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் விரைந்து வந்து காரையும், அதிலிருந்த 10 பேரையும் காவல் நிலையத்திற்கு

சாத்தான்குளம் பகுதியில் நூதன முறையில் பணம் பறிக்கும் மர்ம நபர்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் வீடுகளுக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபடும் ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் காவல் துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் முருகன்(39). விவசாய கூலித்தொழிலாளியான இவரது வீடு பழுதடைந்துள்ளதால் அதனருகில் புதியதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த வீடு கான்கிரிட் பலகை அடிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன், அவரது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டனர். 8ம் வகுப்பு படிக்கும்

வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மவுன அஞ்சலி: அண்ணாமலையார் கோயிலில் மோட்ச தீபம்

திருவண்ணாமலை: காஷ்மீரில் தேர்(கார்) குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 40 வீரரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாட்டுக்காக உயிர்நீத்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு, நாடு முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.அதன்படி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள ஈசான்ய மைதானத்தில், மாவட்ட ஆட்சியர்

சின்னப்பேராலியில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு

விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னப்பேராலியில், தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அருகே, பெரியபேராலி ஊராட்சியில் பெரிய பேராலி, சின்னப்பேராலி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 850 குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சின்னப்பேராலியில் 350 குடியிருப்புகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் வாறுகால்கள் அனைத்தும் மண்மேவி கிடப்பதால், கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளது. ஊராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சின்னபேராலி தெருக்களில், வாறுகாலை தூர்வாராததால் சுகாதாரக்கேடு அதிகரிப்பதாக பொதுமக்கள்

நெல்லையப்பர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சுவாமி நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் 18ம் நூற்றாண்டு கட்டிட கலையை சேர்ந்ததாகும். இதனை நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னர் கட்டினார். இக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுவாமி, அம்பாள் கோயிலை இணைக்கும் வகையில் சங்கிலி மண்டம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சன்னதியில் அமைந்துள்ளது ஆயிரம் கால் மண்டபம். இது 520 அடி நீளமும், 63 அடி அகலமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு

தினை, சோளம், பசுந்தீவனங்களுடன் சின்னதம்பி யானைக்கு சமைக்கப்பட்ட உணவு: பயிற்சிக்கு பின்னர் வனத்தில் நடமாடவிட வனத்துறை முடிவு

பொள்ளாச்சி: கோவை அருகே வீட்டில் பிடிபட்ட சின்னதம்பி யானை டாப்சிலிப்பில் விடப்பட்டது. ஆனால் சின்னதம்பி யானை அங்கிருந்து கிளம்பி உடுமலை அருகே செங்கழனிபுதூர், மடத்துக்குளம், கண்ணாடிபுதூர் ஆகிய கிராம பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.அங்குள்ள கரும்பு தோட்டங்கள், வயல்வெளிகளுக்குள் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து வந்தது. கடைசியாக கண்ணாடிபுதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானை விவசாயிகளை திணறடித்தது. இதனால் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பி யானை பிடிக்கப்பட்டது. பின்னர் கும்கிகள் உதவியுடன்

தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் டெல்டாவில் பிரசாரத்தை தொடங்கியது: 3 தொகுதிகளை கேட்டு மிரட்டும் பாஜ

அறந்தாங்கி: பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தாமரை சின்னத்தை வரைந்து, பாஜகவினர் தேர்தல் பணியை தொடங்கியுள்ளதால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் ராமநாதபுரம், திருச்சுழி, அறந்தாங்கி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிமுக

Older Posts››