Press "Enter" to skip to content

Posts published in “தமிழகம்”

பாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

மயிலாடுதுறை: சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளியாக தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கரநல்லூர் கிராம சுடுகாட்டுக்கு போதிய பாதை வசதி கிடையாது.…

கல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

அரியலூரில் கல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை கட்டையால் அடித்து மாணவர்கள் உடைத்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிலால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து…

உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு – அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. இதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால்…

மூணாறு – உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

திருவனந்தபுரம்: மூணாறு அருகே தமிழக எல்லைைய ஒட்டிய நெடுஞ்சாலையில் 2 புலிகள் சாவகாசமாக நடமாடியது பயணிகளை கடும் பீதியில் ஆழ்த்தியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு…

ரஜினிகாந்த்: காலத்தை கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா…

ஈ.சி.ஆர் சாலையில் கஞ்சா விற்பனை – வடமாநில இளைஞர் கைது

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 5 கிலோ கஞ்சாவுடன் வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்…

ரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு – டிடிவி தினகரன்

2021 தேர்தலில் ரஜினி, கமலுடன் அமமுக கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெ‌யலலிதா நினைவிடத்தில் டிடிவி…

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: அசாம் மக்களின் போராட்டமும், பின்னணியும்

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை…

“குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களுக்கு செய்யும் துரோகம்”- கமல்ஹாசன் சாடல்

நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த…

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சூரணம் கிராமத்தில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கர்ணன் என்பவரை அவரது மகன் பிரகாஷ் ராஜ் கட்டையால் தாக்கினார்.…

ப. சிதம்பரம், வைகோ, திருச்சி சிவா பேச்சு: சிறுபான்மை மக்களுக்கு யார் பொறுப்பு?- மாநிலங்களவையில் கேள்வி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை…

குஜராத் கலவர வழக்கு: “நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம் குற்றமற்றது” – நானாவதி ஆணையம் அறிக்கை

2002 குஜராத் கலவர வழக்கில், குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து நரேந்திர மோதி தலைமையிலான அரசு குற்றமற்றது என இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நானாவதி – மேத்தா ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழக உள்ளாட்சி தேர்தல்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி நடந்த வேண்டும் – உச்சநீதிமன்றம்

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள்…

ஆற்றில் திரியும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்

மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தில் 3 முதலைகள் பழவாற்றில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தின் வழியே பழவாறு செல்கிறது. கடந்த சிலவாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆற்றில்…

முதல் நாளில் ரூ.200 கொடுத்து தலைவி படத்தை தீபா பார்க்கலாம் – ஏ.எல்.விஜய் 

தலைவி படத்தை பார்க்க வேண்டுமென்றால் படம் வெளியாகும் முதல் நாளிலேயே ரூ.200 கொடுத்து தீபா பார்க்கலாம் என ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற பெயரில்…

தேனி மாவட்டத்தில் கொட்டும் பார வண்டி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

தேனி: தேனி மாவட்டத்தில் கொட்டும் பார வண்டி சக்கரத்தில் சிக்கிஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் வந்தவர் பலியானார். தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த வேல்முருகன், மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது…

நாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை தொடங்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வர்த்தகர்கள், மீனவர்கள் மற்றும்…

கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள்: அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கே அதிகாரம்?

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்து அந்தந்த மாவட்ட அதிமுக செயலாளர்களே முடிவெடுப்பார்கள் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27…

“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” – உச்சநீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலை 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்…

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : “இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை” – அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். “யாராவது உங்களை அச்சத்திற்கு உள்ளாக்க முயற்சித்தாலும் அச்சப்படாதீர்கள்” என்று அவர்…

புதுச்சேரியில் உள்ள குபேர் சந்தையில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள குபேர் சந்தையில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை நடைபெறுகிறது. குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வெங்காய பதுக்கல் தொடர்பாக சோதனை நடத்துகின்றனர். Source: Dinakaran

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி ஏல முறையில் பணம் பெற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்…

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் நில உரிமையாளர்கள் விவசாயம்: உளுந்து, சோளம், நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன!

சிவகங்கை: கீழடியில் அகழாய்வு பணி நடந்த நிலத்தில், அதன் உரிமையாளர்கள் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர். கீழடியில் கடந்த ஜூன் 13ம் நாள் தொடங்கிய 5ம் கட்ட தொல்லியல் பணிகள் அக்டோபர் 3ம் தேதியுடன் நிறைவுபெற்றன.…

அரசு பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு – படியில் பயணம் செய்ததால் விபரீதம்

சென்னை தி.நகர் பணிமனை வாயிலில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார். அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த சரண் என்ற மாணவர், சென்னை தி.நகர் பணிமனையில் இருந்து…

பன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் – திருச்சியில் கொடூர சம்பவம்

திருச்சியில் பன்றி இருக்கும் இடத்தைக் காட்டியதால் 12 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் அலியார்.  இவரது மகன் அப்துல் வாஹித்(12). இவர் ஆறாம்…

2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்: ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ்

சென்னை: நடிகர் ரஜினி அடுத்த ஆண்டு கட்சி தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் என ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டி அளித்துள்ளார். 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம்…

தென்காசி அருகே 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் 7 வயது சிறுமி தானியாஸ்ரீ, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். தானியாஸ்ரீ-யின் உறவினர்களின் குழந்தைகள் பாலவைகுண்டம்(6), எஸ்வந்த(6) ஆகியோருக்கும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது Source: Dinakaran

சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் – காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்

சென்னையில், சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த 8ஆம் வகுப்பு மாணவனுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.  சென்னை குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம், கவரை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்.…

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் கட்ட நிலம் தர மக்கள் மறுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் தர மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களை விமான நிலையத்துக்கு கொடுக்க மாட்டோம் என்று மக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். காஞ்சிபுரம்…

அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

அரியலூர்:  செந்துறை மேட்டுப்பாளையத்தில் அருந்துகிடந்த மின்வயரை கையில் எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜோதியின் உடலை கைப்பற்றி செந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Source:…

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கே அதிகாரம் என தகவல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கே அதிகாரம் என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் அளித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. Source: Dinakaran

பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) தொடர்பாக சென்னை நிபுணர்கள் கோவையில் விரைவில் ஆய்வு

கோவை: சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிறுவன நிபுணர்கள் விரைவில் கோவையில் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளார். கோவையில் பாதாளத்தொடர்வண்டி…

 5வது மாடியில் இருந்து விழுந்து உயிர்தப்பிய குழந்தை!

5வது மாடியில் இருந்து விழுந்த 8 மாதக்குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது சென்னை சவுகார்பேட்டையில் மிண்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 மாதக்குழந்தை ஜினிஷா விளையாடிவாறே பால்கனிக்கு வந்துள்ளது. தவழ்ந்து வந்த குழந்தை…

சேலம் லட்சுமி ஓட்டலுக்கு சொந்தமான 5 இடங்களில் தொடாந்து 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சேலம்: சேலம் லட்சுமி ஓட்டலுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லட்சுமி ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான உணவகங்கள், வீடு என 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

சேலம் அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்தவர் கைது

சேலம்: சேலம் அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரபாண்டி அருகே அறியானுரை சேர்ந்த பழனிசாமி என்பவரை கைது செய்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்…

அரியலூர் அருகே மாணவர்களின் சாலைமறியல் போராட்டத்தில் கற்கள் வீசப்படத்தில் அரசு பேருந்து கண்ணாடி சேதம்

அரியலூர்: அரியலூர் அருகே மாணவர்களின் சாலைமறியல் போராட்டத்தில் கற்கள் வீசப்படத்தில் அரசு பேருந்து கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. ஜெயம்கொண்டான் அருகே சிலாலில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து ,மீது நிகழ்ந்த கள்வீச்சில் கண்ணாடி சேதமானது.…

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீபம்

பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது. 1008 மீட்டர் திரி, 3000 கிலோ நெய்யை கொண் டு ஜோதி ஏற்றப்பட்டது. இதில் தரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி…

சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏரி தண்ணீரில் மிதக்கும் தென்னை மர கழிவுகள்

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் ஏரிகளில் மிதக்கிறது. எனவே இதை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம்…

மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு: ஏற்றுமதி நிறுவனங்கள் முயற்சி

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் பங்களிப்புடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் நிறுவனங்களில் தென் மாவட்டம், வடமாநில…

மகளின் திருமண கடனால் மன உளைச்சல் –  பால் வியாபாரி மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை

சேலம்‌ மாவட்டம்‌ ரெட்டிபட்டி அருகே ‌‌மகளின் திருமணத்திற்கா‌க வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால், பால் வியாபாரி தனது மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் அருகே உள்ள ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.…

காளையார்கோவிலில் கழிவுநீர் கால்வாயை காணவில்லை: புதர்மண்டி மறைந்துவிட்டது

காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் ரோட்டில் ஓரமாக உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காளையார்கோவிலை சுற்றியுள்ள 43 பஞ்சாயத்துக்கு தலைமையிடமாக காளையார்கோவில் ஊராட்சி…

காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலையில் எலும்புக்கூடாய் நிற்கும் எரிந்த கார்கள்

காரைக்குடி: காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலையில் தீ விபத்துக்குள்ளாகி எரிந்த நிலையில் நிற்கும் 2 கார்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலை சூரக்குடி பகுதியில் கடந்த வருடம் தேர்…

சேலம் குரும்பப்பட்டியில் பாகனை மிதித்து கொன்ற மதுரை ஆண்டாள் யானை ஆனைமலையில் உற்சாகம்

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாகனை மிதித்து கொன்ற மதுரை ஆண்டாள் யானை, ஆனைமலையில் பிற யானைகளுடன் சேர்ந்து உற்சாகமாக இருக்கிறது. மதுரை அழகர் கோயிலில் சுவாமி ஊர்வலத்திற்கும், பக்தர்களுக்கு ஆசி வழங்கவும்…

பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநி, திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை மகாதீபம்

பழநி: திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பழநி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில், பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த டிச.4ம்…

கமுதி அருகே வார்டு மறுவரையறையில் குளறுபடி…தேர்தலை புறக்கணிக்க 6 கிராம் மக்கள் முடிவு

கமுதி : கமுதி அருகே வார்டு மறுவரையறையில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்க 6 கிராம் மக்கள் முடிவு செய்துள்ளனர்.  முத்தலாங்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட 6 கிராம் மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக…

பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி: நீர்திறப்பு 2700 கனஅடி

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. நீர் இருப்பு 32.7 டிஎம்சியாகவும், நீர்வரத்து 2709 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2700 கனஅடியாக உள்ளது. Source: Dinakaran

மருத்துவமனையில் உற்சாகமாகப் பணி‌யை தொடங்கிய திருநங்கை அன்புரூபி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி‌யருக்கு சிறப்பான ‌வரவேற்பு அளிக்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன் மடம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்றவரான ரத்தினபாண்டி,…

உள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, விதிமுறைகளை பின்பற்றியே தேர்தல் நடத்தப்படுவதால், திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய…

கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை

கடலூர்: கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் நேற்று 4 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் வேலும் விலை குறைந்துள்ளது. Source: Dinakaran

வாணியம்பாடியில் ஒருதலைக்காதலால் விபரீதம் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர்  ஜெகன்(27). ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக உள்ளார்.  இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த  லக்‌ஷணா(26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணை…