Go to ...
RSS Feed

ஆன்மிகம்

கூத்தனூரை அடுத்து சரஸ்வதிக்கு அமைந்துள்ள இரண்டாவது தனிக்கோயில்!

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவி சிவாலயங்களில் தனி சந்நிதி பெற்றும், சில தலங்களில் துர்கா, லஷ்மி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவிகளாகவும் எழுந்தருளியுள்ளாள்.  வெகு சில இடங்களிலேயே தனி ஆலயங்கள் உள்ளன. அவ்வரிசையில் சென்னைக்கு அருகில் கலைமகளுக்கு ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. கூத்தனூரை அடுத்து சரஸ்வதி தேவிக்கு அமைந்த இரண்டாவது தனிக்கோயில் என பெருமையாகப் பேசப்படுகின்றது.  பெரியபாளையத்திலிருந்து ஊத்துக் கோட்டை செல்லும் வழியில் உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் சரஸ்வதி தேவிக்கு அபூர்வமாக ஓர் ஆலயம் கட்டப்பட்டு, கடந்த

துயரம் தீர்க்கும் துர்க்கை வழிபாடு! 

நவராத்திரி பெண்களுக்கான முக்கியமான பண்டிகையாகும். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையைப் பூஜித்து வழிபட வேண்டும்.  ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இருந்தல் அவசியமாகும். கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே, வீரம் தரும்  துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்களும், செல்வம் தரும் லட்சுமி தேவியை அடுத்த மூன்று தினங்களும், கல்வி தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாகப் பூஜை செய்து வழிபட்டால்

இன்று துர்காஷ்டமி: துர்க்கையை வழிபட மறக்காதீங்க! 

புரட்டாசி மாதத்தில் வரும் எட்டுமி திதியை துர்காஷ்டமியாக வழிபடுகிறோம். பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில்தான், கோகுலத்தில் துர்க்கையின் அவதாரமும் நிகழ்ந்தாக சொல்லப்படுகிறது. எனவே கிருஷ்ணர் அவதரித்த எட்டுமி திதி, துர்க்கை வழிபாட்டுக்கு உகந்த திதியாக அமைந்துள்ளது.  அம்பாளுக்கு உகந்த நவராத்தி விழாவின் எட்டாவது நாள் எட்டுமி திதி, மகா எட்டுமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவதி திதி மகா நவமியாகப் போற்றப்படுகிறது.  துர்காஷ்டமியில் நமக்கு அனைத்துச் சக்தியும் கிடைப்பதாக ஐதீகம். இந்த நாளில், ராகுகால

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு: நிலக்கல், பம்பையில் போலீசார் குவிப்பு 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காகத் திறக்கப்படுகிறது.  சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம்

ஆலங்குடி: குருபெயர்ச்சி லட்சார்ச்சனை பூர்த்தி விழா

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில், குருபெயர்ச்சி லட்சார்ச்சனை பூர்த்தி விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.குருபெயர்ச்சியை முன்னிட்டு, முதல்கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த செப்.27-ஆம் தேதி தொடங்கி அக்.1-ஆம் தேதி வரை நடைபெற்றது.2-ஆம் கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி இரவுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, நடைபெற்ற லட்சார்ச்சனை பூர்த்தி விழாவில், உத்ஸவர் தெட்சிணமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.  Source: dinamani

காளஹஸ்தியில் காளராத்திரி தேவி அலங்காரம்

காளஹஸ்தி கோயில் நவராத்திரி விழாவில் காளராத்திரி தேவி அலங்காரத்தில் ஞானபிரசூனாம்பிகை அம்மன்.  காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 7ஆம் நாள் இரவு காளராத்திரி தேவி அலங்காரத்தில் ஞானபிரசூனாம்பிகா அம்மன் காட்சியளித்தார்.ஆந்திரத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த 7 நாள்களாக நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஞானபிரசூனாம்பிகை அம்மன் சந்நிதி எதிரில் கொலு அமைத்து அதன் மீது அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தினந்தோறும் காலையும், மாலையும்

நவராத்திரி விழா கொலு கண்காட்சி

 சிவானந்த சேவாஸ்ரமத்தில்  வைக்கப்பட்டுள்ள  கொலு. காட்டாங்கொளத்தூர் சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமத்தில் நவராத்திரி விழாவையொட்டி கொலு கண்காட்சி நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள இந்த சேவாஸ்ரமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அங்கு கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பாராயணம், சக்திக் கவசம், ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை இரவு சென்னை கலாúக்ஷத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சிவானந்த குருகுலத்தில்

பக்தனுக்காக சமையல்காரனாக மாறிய பாண்டுரங்கன்!

அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன. வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல. தனக்கும், தன் மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை, தினமும் உஞ்ச விருத்தி எடுத்துச் சாப்பிட்டு வரும், பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீடு. பிம்பளம் என்ற அழகிய நகரத்தின் நடுவே அமைந்திருந்த நீளோபாவின் வீட்டில்தான்

தசரா பண்டிகை: 4 கோடி ரூபாய் நோட்டுகளால் ஜொலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்! 

ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில் தசரா பண்டிகையை முன்னிட்டு தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரிப்பட்டது.  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தசரா பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. குருபாம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு தசரா பண்டிகையை முன்னிட்டு அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியசித்தார்.  இதையொட்டி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் நோட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தவிர அங்க

மகா புஷ்கர விழா 6-ம் நாள் வழிபாடு: தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்!

நெல்லை தாமிரவருணியில் மகா புஷ்கரத்தின் ஆறாம் நாளான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர். கடந்த 11-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி படித்துறைகளில் மகா புஷ்கரம் விழா தொடங்கியது. குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரவருணிக்கு மஹா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. புஷ்கர விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், பொதுமக்கள் நீராடி வருகின்றனர். விழா தொடங்கி ஐந்து நாட்களும் நாடு முழுவதும்

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்கவேண்டிய புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் 

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.  தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூரில் புற்றுவடிவில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறாள். சோழமன்னர்கள் தங்களது வெற்றி தெய்வமாக காளியை வழிபட்டு வந்தார்கள். இவர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திசைகளிலும், எட்டு சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தார்கள். இதில், கிழக்கு பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே “புன்னைநல்லூர் மாரியம்மன்’ என சோழசம்பு நூல் கூறுகிறது. 1680-ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா திருத்தல யாத்திரை செய்யும் போது, சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு

ஏழுமலையான் கோயிலில் உள்ள தசாவதார சிலைகளைக் காண ஏற்பாடு

ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள தசாவதார சிற்பங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சிற்பங்களைக் காண ஏற்பாடு செய்யப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார். திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை ஒட்டி திங்கள்கிழமை காலை நடைபெற்ற வாகன சேவையில் அவர் கலந்து கொண்டார். அப்போது மாடவீதியில் உள்ள அரங்குகளில் வாகனச் சேவைக்காக காத்திருந்த பக்தர்களிடம் கலந்துரையாடினார். அவரிடம் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர். அதன்படி செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலின் உத்தரவின்படி, ஏழுமலையான் கோயிலில் உள்ள தொன்மையான தூண்களை தமிழகத்தைச் சேர்ந்த

கலியுக கடவுள் கல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்

நாச்சியார் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நிவாஸ பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலம். பெருமானின் வலப்பக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத வகையில் இத்திருக்கோவிலில் பார்வை தருகிறார். ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வலப்பக்கத்தில் நான்முகப்பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக

புரியாத புதிர்களின் புதிரான விளக்கங்கள்: நான் + நீ ஸ்ரீ ஞானி

ஈருடல்கள் இணையும் போது உருவாகும் காமத்தீயின் உச்சத்தில் உதிரும் மிச்சத்தில் உருவான நீர் முத்துக்களில் தொடங்கி உயிர்மூச்சுக் காற்றோடு வாழ்ந்து விண்ணோக்கி வளர்ந்து கடைசியில் மண்ணோடு மடியும் மனித வாழ்வு என்பதை மிக அழகாக வாழும் மக்களுக்கு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் சொன்ன ரகசியம். இதை உணர்ந்தவன் எப்படி ஞானியாகிறான் என்பதின் சிறு விளக்கம். இறைவனான நான் மனிதனான நீ இருவரும் இணைந்தால் ஞானி ஆகிறோம். அண்டத்தில் அணுவாக வலம் வந்த நான் கருவெனும் நவதுவார பிண்டத்தில்

சரஸ்வதி ஸ்தாபனம்: நம் வீட்டு குட்டீஸ் படிப்பில் சிறக்க இன்று சரஸ்வதி தேவியை வரவேற்போம்!

நாளை சாரதா நவராத்திரியின் ஏழாம் நாள் முதல் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்குரிய நாட்களாகும். அதனை முன்னிட்டு இன்று சரஸ்வதி ஸ்தாபன தினமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் வரும் மூல நக்ஷத்திரத்தில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்வது விசேஷமாகும்.  ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு புரட்டாசி மாதம் 24-ம் தேதி புதன் கிழமை (10/10/2018) ஆரம்பமானது. தக்ஷிணாயன புண்ய

தாமிரவருணியில் களைகட்டியுள்ள மஹா புஷ்கரம் விழா: 5-ம் நாளாகப் புனித நீராடி வரும் மக்கள் 

நெல்லை தாமிரவருணியில் மகா புஷ்கரத்தின் ஐந்தாம் நாளான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.  கடந்த 11-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி படித்துறைகளில் மகா புஷ்கரம் விழா தொடங்கியது. குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரவருணிக்கு மஹா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. புஷ்கர விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், பொதுமக்கள் நீராடி வருகின்றனர். விழாவின் நான்கு நாட்களும் நாடு முழுவதும் இருந்து

மண அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழா கடந்த 5 -ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாள்களாக தினமும் காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பும் நடைபெற்றது. பிறகு ஒவ்வொரு நாளும் இரவு, வாகனங்களில் அய்யா வைகுண்டர் வீதி உலாவரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம்

புரட்டாசி 4 ஆம் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருவடிசூலம் கோயில்புரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் செல்லும் வழியில் திருவடிசூலம் கோயில்புரத்தில் இகோயில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறகிறது. சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இக்கோயிலில் அமைந்துள்ள 108 திவ்ய தேசத்தில் அமைந்துள்ள பெருமாள்களுக்கும் சிறப்பு அபிஷேக, சிறப்பு அலங்காரம்

காளஹஸ்தியில் அன்னபூர்ணா தேவி அலங்காரம்

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 5ஆம் நாளில் அன்னபூர்ணா தேவி அலங்காரத்தில், ஞானபிரசூனாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் கடந்த 10ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞானபிரசூனாம்பிகை அம்மன் சந்நிதி எதிரில், பொம்மை கொலு வைத்து தினந்தோறும் காலையும், மாலையும் அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகின்றனர். மாலை ஞானபிரசூனாம்பிகை அம்மன் தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதன்படி நவராத்திரியின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் அம்மன்

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள்: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி; 4 லட்சம் பக்தர்கள் பார்வை

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்தபோது சுமார் 4 லட்சம் பக்தர்கள் அவரை தரிசித்தனர். ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த புதன்கிழமை இவ்விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் மலையப்ப சுவாமி, தாயாரின் அவதாரமான மோகினி அவதாரத்தில் கையில் வெண்ணை உருண்டை ஏந்திய கிருஷ்ணசுவாமி உடன்

வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கல்பவிருட்ச வாகன சேவை!

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் காலையில் மலையப்ப சுவாமி ராஜமன்னார் அவதாரத்தில் கல்பவிருட்ச (கற்பக மரம்) வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை இவ்விழா தொடங்கி, விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 4ஆம் நாளான சனிக்கிழமை காலையில் மலையப்ப சுவாமி பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்த வரத்தைக் கொடுப்பதாக நம்பிக்கை கொண்டுள்ள கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்

இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாளை வழிபட மறக்காதீர்கள்!

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று. பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது. புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். இவ்வாறு விரதம் இருப்பதன் மூலம் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்பு திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். புரட்டாசியில் வரும் எல்லாச் சனிக்கிழமைகளிலும் அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும்

தமிரவருணி மகா புஷ்கரத்தில் நீராடுபவர்கள் கவனத்திற்கு! 

தாமிரவருணி மஹா புஷ்கர விழா கடந்த வியாழனன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா புஷ்கரம் இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படித்துறைக்கு வந்து புனித நீராடி வருகின்றனர்.  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் நடைபெறும். இந்தாண்டு விருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியாவதால் தமிரவருணியில் புஷ்கரம் நடைபெறுகிறது.  புஷ்கரத்தில் நீராடுபவர்கள் முழுபயனைப்பெற

மகாபுஷ்கரத்தின் 3-ம் நாள் இன்று: நவக்கிரக ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு 

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை நடைபெற்ற நவக்கிரக ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, புனித நீராடி மகிழ்ந்தனர்.  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா புஷ்கரம் கடந்த அக்.11-ம் தேதி தொடங்கி இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படித்துறைக்கு வந்து புனித நீராடிச் செல்கின்றனர்.  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய

மகாபுஷ்கரத்தின் 2-ம் நாள் இன்று: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல் 

தாமிரவருணி மகா புஷ்கரத்தின் இரண்டாம் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்குப் பின் தாமிரபரணி மகா புஷ்கர விழா பாபநாசம் படித்துறையில் நேற்று கோலாகலமாக துவங்கியது.  குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு குருபகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.  மகா புஷ்கரத்தின் இரண்டாம் நாளான இன்று தைப்பூச

உலக மூட்டு நோய் தினம்: முடக்கு வாத நோயிலிருந்து விடுபட சனைச்சர பகவானை வணங்குங்க!

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி உலக முடக்குவாத தினமாக அனுசரித்து வரும் நிலையில் ஆர்த்ரைடிஸ் பற்றியும் அந்த நோய் வருவதற்கான ஜோதிட காரணத்தையும் இப்போது பார்ப்போம். வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டிப் பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ம் ஆண்டிலிருந்து இந்தத் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த தினமானது ஆர்த்ரைடிஸ்

உழவாரப் பணிக்காக காத்திருக்கிறது பழையார் சிவன் கோயில்

பழையார் எனும்பெயரில் கொள்ளிட முகத்துவாரத்தில் ஓர் ஊர் உள்ளது. சோழ தலைநகரும் ஒன்று உள்ளது. இந்த பழையார் கொல்லுமாங்குடி – நெடுங்காடு சாலையில் ஆறு கி.மீ தூரத்தில் உள்ளது.  பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் அரை கிலோ மீட்டர் சென்றால் பெரிய குளத்தின் மேற்கில் உள்ளது சிவாலயம். பெரிய செங்கற்கோயில் ராஜ கோபுரம் இல்லை அதற்கு ஒட்டினாற்போல் ஒரு விநாயகர் சன்னதி ஒன்று முன்னிழுக்கப்பட்ட ஒரு சிமென்ட் மண்டபம் கொண்டு உள்ளது.  ஒரு கால பூஜை கோயில்

இந்த வாரம் எந்த ராசிக்கு நினைத்த காரியம் கைகூடும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (அக்டோபர் 12 – அக்டோபர் 18) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். செயல்களில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். விரக்திகளும் விரயங்களும் நீங்கி வருவாய் பெருகும். குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக்கொடுத்துநடந்து கொள்ளவும். பொருளாதாரம் படிப்படியாக வளரும்.  உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். இருப்பினும்

கே.சி.எஸ் ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள்: (சிம்மம் முதல் விருச்சிகம்)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயனடைவோம்.  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) 11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். நெடுநாட்களாகத் தள்ளிப்போயிருந்த குடும்ப பாகப் பிரிவினை சாதகமாக முடிவடையும். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். தர்மகாரியங்களுக்காகவும்

சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி வலம்

பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி. திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை இவ்விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 2ஆம் நாள் (வியாழக்கிழமை) காலையில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் கையில் புல்லாங்குழலுடன் சின்ன

காளஹஸ்தியில் குரு பெயர்ச்சி விழா

காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு நடைபெற்ற பாலாபிஷேகம். காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கோவில் நிர்வாகம் நடத்தியது.ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள இக்கோயிலில் வியாழக்கிழமை காலையில் குரு பகவான், துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயரும் குருப் பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலைக்கு அருகில் பெரிய கலசத்தை நிறுவிய சிவாச்சாரியார்கள், அதற்கு பூஜைகள் செய்தனர்.மேலும் 108 சங்குகளில் நீரை நிரப்பி அவற்றுக்கும்

உலக பார்வை தினம் – பார்வை பிரச்னைகள் பற்றி வேதத்தின் கண்ணான ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் உலகப் பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று அக்டோபர் 11-ஆம் தேதி உலக பார்வை தினமாக அமைந்திருக்கிறது.  இந்நாளில் கண் நலம் பற்றிய செய்திகளை விழிப்புணர்வினை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறது.  கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகைக் காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள்

திருக்கணித பஞ்சாங்கபடி இன்று பெயர்ச்சியாகிறார் குருபகவான்! 

திருக்கணித பஞ்சாங்கபடி இன்று (11-10-2018) குரு பகவான்  துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வாக்கிய பஞ்சாங்கபடி கடந்த அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அனைத்து சிவாலயங்கள், குரு பரிகாரஸ்தலங்களிலும் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது.  நவக்கிரகங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாகவும், கடக ராசியை உச்சம் பெறும் வீடாகவும், மகர ராசியை நீசம் பெறும் வீடாகவும் கொண்டவர். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

குன்றின் மேல் வீற்றிருக்கும் விலங்கல்பட்டு முருகன்!

கடலூர் வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலும், கடலூர்-திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. நெடும் பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண் பாதையில் ஆற்றைக் கடந்து இவ்வூரை அடைய வேண்டும். கடலூர் துறைமுக நகருக்கு மேற்கேயும், திருவந்திபுரத்திற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது நீண்ட மலைத் தொடர். இந்த மலை கூடலூர் குன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் கேப்பர் மலை எனப்படும் இந்த மலை, கூடலூர் குன்று என்றும்

உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா கோலாகலமாக துவக்கம் 

உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா கோலாகலமாக நேற்று தொடங்கியது. அக்டோபர் 19-ம் தேதி முடிய விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தசாவதார அலங்கார நிகழ்ச்சிகள் நடக்கிறது.  துவக்க விழாவில் மனோன்மணி அம்மன் அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாவது நாளான இன்று(11-ம் தேதி) அம்மன் மீனாட்சி, 12-ம் தேதி சண்டி, 13-ம் தேதி காயத்ரி, 14-ம் தேதி அன்னபூரணி,

தாமிரவருணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியது: படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி மகிழ்ச்சி

தாமிரவருணி மஹா புஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா புஷ்கரம் இன்று தொடங்கி இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படித்துறையில் புனித நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் நடைபெறும். மூன்றரைக் கோடி தீர்த்தத்திற்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குரு

நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்: பெரிய சேஷ வாகனத்தில் வலம் வந்த மலையப்பர்

திருமலையில் புதன்கிழமை காலை தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்த மலையப்ப ஸ்வாமி. (வலது) இரவு பெரிய சேஷ வாகனத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி. திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி தன் நாச்சியார்களுடன் வலம் வந்தார்.திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. பிரம்மோற்சவம் தொடங்கும் முன் மலையப்ப

திருமலையில் அனைத்து தரிசனங்களும் ரத்து

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, தேவஸ்தானம் அனைத்து விதமான தரிசனங்களையும் ரத்து செய்துள்ளது.திருமலையில் அக்டோபர் 10 முதல் 18-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதனால் அந்நாள்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபெறும் வாகன சேவையைக் காண லட்சகணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். அதனால் தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் பார்வை, பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் பார்வை, நன்கொடையாளர்களுக்கு வழங்கும் பார்வை, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பார்வை, கை குழந்தைகளின் பெற்றோர் பார்வை

கும்பகோணம் பகுதியில் தொடங்கியது நவராத்திரி விழா

கோயில் நகரமான கும்பகோணம் டவுன் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி, உற்சவ அம்பாள்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்கள்.   அபிமுகேஸ்வரர் மற்றும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயங்களில் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளின் கொலுக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் திரளாக வந்திருந்து, அம்மனைத் தரிசித்தும், கொலு பொம்மைகளை ரசித்தும் சென்றார்கள்.   – குடந்தை ப.சரவணன் – 9443171383 Source: dinamani

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் தொடக்கம்

திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவானது அக்டோபர் 18-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பார்வை செய்தனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாள் விழா இன்று தொடங்கியுள்ளது.  இதை முன்னிட்டு பிரம்மோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது. நவராத்திரி

தாமிரவருணியில் நாளை தொடங்குகிறது மகா புஷ்கர விழா!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் மகாபுஷ்கர விழா நாளை துவங்கி 22-ம் தேதி வரை நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கர விழாவாகும் இது.  இம்முறை குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று பிரவேசிப்பதால் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் தாமிரபரணி என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஷ்கரம் ஆகும். அதனால் குரு பெயர்ச்சிக்குப் பிறகு வரும்

மனம் மற்றும் மூளை சம்மந்தப்பட்ட பிரச்னைகளை போக்கும் மூன்றாம் பிறை பார்வை! 

இன்று பஞ்சாங்கத்தில் புரட்டாசி மாதத்தின் சந்திர தரிசன நாளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாம் பிறை பார்வை முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு

உலக மனநல தினம்: மன நோய் குணமாகனுமா? அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்க!

உலக சுகாதார நிறுவனம் மனநலப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 10-ம் தேதியை உலக மனநல தினம் என அறிவித்துள்ளது. உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது மனதைப் பாதிக்கும். அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலைப் பாதிக்கும். மன நலத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஜோதிடத்திற்கும் மன நலத்திற்கும் உள்ள தொடர்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதே உலக மனநல நாளில் இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். மனநலம் குன்றுதல்

நவராத்திரியில் வணங்க வேண்டிய அன்னையும், நிவேதனமும்

  நவராத்திரியில் நாம் ஒன்பது நாட்களும் எந்தெந்த அன்னையை வணங்க வேண்டும்.  நிவேதனமாக என்ன படைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.  முதலாம் நாள்: சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை. நீதியைக் காக்கவே கோபமாகக் காட்சியளிக்கிறாள். நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல். இரண்டாம் நாள்: அன்னையை வாராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். நிவேதனம் :

ஆண்டுதோறும் 12 பிரம்மோற்சவங்களை நடத்திய பண்டைய மன்னர்கள் !

ஏழுமலையானுக்கு மாதத்திற்கு ஒரு பிரம்மோற்சவம் என்ற வகையில் ஒரே ஆண்டில் 12 பிரம்மோற்சவங்கள் நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயனான விளங்கும் ஏழுமலையான், ஆனந்த நிலையம் எனப்படும் கோயிலின் விமானத்துக்கு நடுவில் புரட்டாசி மாதத்தில் எழுந்தருளினார் என்பது ஐதீகம். அந்த மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் அன்று முடிவுபெறும் 9 நாள்களுக்கு பிரம்மதேவன் உற்சவங்களை நடத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் அவற்றை பிரம்மோற்சவம் என்று அழைக்கின்றனர். இந்த உற்சவத்தின்போது காலை, இரவு என இருவேளைகளிலும் நடைபெறும் வாகனச்

108 கோ பூஜையுடன் தொடங்கியது வேதகிரீஸ்வரர் கோயில் நவராத்திரி விழா

108 பசுமாடுகளுக்கு நடத்தப்பட்ட கோபூஜை. திருக்கழுக்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா 108 கோபூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இக்கோயிலில் உள்ள திரிபுரசுந்தரி அன்னைக்கு திருக்கழுக்குன்றம் வேதமலை வல இருமுடிப் பெருவிழாக் குழுவினரின் ஏற்பாட்டில் 11ஆம் ஆண்டு நவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இவ்விழா வரும் 19ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரர் கோயிலின் ஆனை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 108 பசுக்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு அவற்றின் கன்றுகளுடன் கோபூஜை

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தின்போது துர்க்கையம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், புரட்டாசி மாத அமாவாசையையொட்டி, ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்பது வழக்கம்.புரட்டாசி மாத அமாவாசை என்பதால் திங்கள்கிழமை

உங்கள் அதிர்ஷ்ட எண் எது? அக்டோபர் மாதப்படி வெற்றி யாருக்கு?

அக்டோபர் மாத எண்ஜோதிட பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன்பெறுவோம். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நேர்மையும் நிதானமும் ஒருங்கே அமையப்பெற்ற முதலாம் எண்ணில் பிறந்தவர்களே இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். வாங்குதல்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் இருந்த

நவராத்திரியில் அம்பாளுக்கு விதவிதமான சுண்டல் படைத்து வழிபடுவது ஏன்?

  நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. “நவம் என்ற சொல்லுக்கு “ஒன்பது என்றும், “புதியது என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒரு நாளில், பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி அம்பாளின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் என்பது இல்லை. இதில் தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு. பகலில்

கண்ணா லட்டு தின்ன ஆசையா? 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் புராண கதைகளை எப்பொழுது படித்தாலும் மனதுக்கு இனிமையாக இருக்கிறது. மதுரா நகரில் “பாங்கே பிஹாரி” என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவிளையாடல்கள் பல செவி வழி செய்திகளாக அவ்வப்போது உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றை நாம் இப்போது அனுபவிப்போம்.   வெகு நாட்களுக்கு முன்பு பிருந்தாவன ஷேத்திரத்தில் “ஸ்ரீ பாங்கே பிஹாரிஜி மந்திர்” என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கோயில் இருக்கிறது. அழகே உருவான ஸ்ரீ கிருஷ்ணர்

Older Posts›› ‹‹Newer Posts