Press "Enter" to skip to content

கோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லையா – கதாநாயகிகள் மீது நடிகர் சாடல்

திரையுலகில் ஹீரோயின்கள் கோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளதாக பிரபல நடிகர் சாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கால் திரையுலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு பட உலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ முன்னணி கதாநாயகர்கள் பலர் பெப்சி அமைப்புக்கு நிதி கொடுத்து உள்ளனர்.

அரிசி மூட்டைகளும் வழங்கப்படுகின்றன. துணை நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கும் நிதி வழங்கி வருகிறார்கள். தெலுங்கு நடிகர்களும் அங்குள்ள தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள். ஆனால் கதாநாயகிகள் பணம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பிரபல தெலுங்கு நடிகரும் தமிழில் ஸ்ரீகாந்துடன் ஜூட், சிம்புவின் சரவணா, பிரசாந்துடன் சாகசம் ஆகிய படங்களில் நடித்துள்ளவருமான பிரம்மாஜி கூறும்போது, ‘தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடிக்க கோடி கோடியாக சம்பளம் வாங்கிய மும்பை கதாநாயகிகள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வராதது வியப்பாக உள்ளது. லட்சங்களை கொடுக்க வேண்டும் என்று இல்லை. சில ஆயிரம் ரூபாய்களையாவது கொடுத்து உதவி இருக்க வேண்டும். அதிக சம்பளம் வாங்கிய அவர்களுக்கு உதவ மனம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »