Press "Enter" to skip to content

உண்மைச் சம்பவத்தை தழுவிய திலீப்பின் ‘தங்கமணி’ மார்ச் 7-ல் வெளியீடு! 

சென்னை: மலையாள நடிகர் திலீப் நடித்துள்ள ‘தங்கமணி’ திரைப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உடல்’ மலையாள படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரதீஷ் ரகுநந்தன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘தங்கமணி’. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் திலீப் கதாநாயகனாக நடித்துள்ளார். ப்ரனிதா, நீடா பிள்ளை, மனோஜ் கே ஜெயன், அஜ்மல், ஷைன் டாம் சாக்கோ, சித்திக், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு வில்லியம் பிரான்சிஸ் இசையமைத்துள்ளார்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. கேரளாவில் நாளை முதல் (பிப்.22) மலையாள திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக இப்படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி படம் வரும் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. >வாசிக்க: கேரளாவின் வாச்சாத்தி – ‘தங்கமணி’ திரைப்படமும், பதைபதைப்பான உண்மைச் சம்பவங்களும்!

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »