Press "Enter" to skip to content

ரூ.30 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகை… நீதிமன்றம் புது உத்தரவு

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பட நிறுவனத்திடம் ரூ.30 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை விசாரித்த நீதிபதி புது உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக் சில வருடங்களுக்கு முன்பு போட்டோ ஷூட் நடத்தி அதில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை சாக்‌ஷியிடம் அனுமதி பெறாமல் நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான ‘வி’ படத்தில் பயன்படுத்தி இருந்தனர். 

இந்த புகைப்படத்தை திரையில் காட்டும்போது பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனமும் பேசப்பட்டு இருந்தது. இதையடுத்து சாக்‌ஷி மாலிக் மும்பை கோர்ட்டில் ரூ.30 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். படத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் புகைப்படம் நீதிமன்றம் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது. படக்குழுவினர் மன்னிப்பும் கேட்டனர். 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.படேல் பட நிறுவனம் சாக்‌ஷி கேட்கும் தொகையை நஷ்ட ஈடாக வழங்குமா? இதில் முடிவு எடுக்கவில்லை என்றால் வழக்கை நீதிமன்றம் விசாரித்து வழக்கில் சாக்‌ஷி வெற்றி பெற்றால் அவர் கேட்கும் தொகையை வழங்க வேண்டும். இதுகுறித்து பேசி முடிவு எடுத்து ஏப்ரல் 1-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »