Press "Enter" to skip to content

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் மறுதயாரிப்புகில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மறுதயாரிப்பு ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.

மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் மறுதயாரிப்பு செய்கின்றனர். இதற்கான மறுதயாரிப்பு உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார். 

பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »