Press "Enter" to skip to content

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’?

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மதகஜராஜா’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

விஷால் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் பண பிரச்சினையால் இப்படம் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், எதுவும் பலனளிக்காததால், இப்படத்தை கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், இப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், சோனு சூட் பகைவனாகவும் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »