Press "Enter" to skip to content

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஒத்த செருப்பு திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன. 

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம், தமிழ் திரைப்படத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.  

இவ்வாறு திரைப்படத்தில் பல்வேறு புதுமைகளை செய்யும் பார்த்திபன், அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரும் இப்படத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இதுவரை அருமையான 3 பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »