Press "Enter" to skip to content

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி

தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் இணையம் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது. இதனாலேயே பிரபலங்கள் தங்கள் பெயரில் போலிக்கணக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே ரசிகர்களை எச்சரித்து விடுகின்றனர். 

தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார். 

“பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமானது. ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த ஐடி-யை அறிக்கை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »