Press "Enter" to skip to content

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், அடுத்ததாக பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளனர். பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைக்கிறார்.

சன்னி லியோன், ஸ்ரீசாந்த்

இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »