Press "Enter" to skip to content

நண்பர் ஸ்ரீகாந்தின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது – ரஜினி இரங்கல்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பகைவனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்த்

அந்த வகையில், ஸ்ரீகாந்தின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »