Press "Enter" to skip to content

இத்தாலி பிரதமர் தலைமையில் புவிசார் மாநாடு…!!!

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகலாந்தில், ஒரு தொகுதியில் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 59 இடங்களில் 183 பேர் போட்டியிட்டனர். இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 291 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

அதில், காலை முதலே பொதுமக்கள்  தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி நாகலாந்தில் 81 புள்ளி 94 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நிறைவடைந்த ஈரோடு வாக்குப்பதிவு…. பதிவான வாக்குகள் என்ன?!!

அதேபோல் 60 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால், 59 இடங்களில் 36 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 369 பேர் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 3 ஆயிரத்து 419 வாக்குச் சாவடிகளில் 640 வாக்குச் சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

இதனிடையே வாக்குப்பதிவு முடிவில் 74 புள்ளி 32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 2 ஆம் தேதி திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்… 

!

இந்த நிலையில் ‘இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா’வின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி, திரிபுராவில் பாரதிய ஜனதா 45 இடங்களையும், இடதுசாரிகள் 11 இடங்களை கைப்பற்றும் என்றும் என்.டி.வி. தெரிவித்துள்ளது.

நாகலாந்தில் என்.டி.பி.பி – பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்றும்,  மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | ”இந்த மதத்தில் மதவெறி இல்லை எனவும் எதிரிகளை மட்டுமே உருவாக்கும் கடந்த காலத்தை தோண்டி எடுக்காதீர்கள்…”உச்சநீதிமன்றம்!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »