Press "Enter" to skip to content

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்…

விருதுநகர் | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யக்கூரிய ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை எனக்கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | திறப்பு விழா காணாமலேயே அழியப்போகும் உடற்பயிற்சி கூடம்… 

ஆசிரியர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டு, டீ கிளாஸ் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்யக்கூறிய மாணவர்களை கட்டாயப்படுத்தியதாகவும். அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

அவ்வாறு செய்ய மறுத்த  8-ம் வகுப்பு மாணவியை முட்டி போடச்சொல்லி தண்டனை அளித்துள்ளனர். இதை கண்டித்து இன்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேலும் படிக்க | ஏழைகளுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்கணும் அரசின் கடமை ஆளுநர் பேச்சு 

தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரெங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். 

மேலும் படிக்க | கழிவறையில் மயங்கி விழுந்து மின் ஊழியா் பலி… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »