Press "Enter" to skip to content

எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி 15 பேர் காயம்…

திருச்சி | சமயபுரம் மேற்கு வீதியை சேர்ந்தவர் விஜயக்குமார் இவருடைய தாத்தா வழியில் சொந்தமான நிலங்கள் சமயபுரம் அருகே ஈஞ்சூர் கிராமத்திலும் மற்றும் சமயபுரம் மேல வீதியில் விஜயகுமார் தாத்தா கோர்ட்டில் ஏலம் எடுத்த வீடும் உள்ளது. 

இந்த நிலையில் விஜயகுமாருக்கு உதவுவது போன்று  சமயபுரம் அருகே ஈஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் ராமு அவருடன் பழகியுள்ளார்.  

மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது… 

மேலும் விஜயகுமாரின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் வி.துறையூரை சேர்ந்த அங்கமுத்து மகன் இளையராஜா, பாரதியார் நகரைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, ஜான்சன் குமார், லால்குடி அருகே சாத்தம்பாடி பகுதியில் சேர்ந்த மணிமகன் ரகுநாத் ஆகிய 4 பேர் உதவியுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளாரும், முன்னாள் திருச்சி மாவட்ட  மத்திய கூட்டுறவு தலைவர் ராமு, 

3 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் விஜயகுமாரின் சொத்துக்களா போலியாக சிட்டா அடங்கள் சான்றிதழ் பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜெயக்குமாரின் சொத்துக்களை தங்களது சொத்துக்கள் என பதிவு செய்ய சார் பதிவாளரை அணுகி உள்ளனர். 

மேலும் படிக்க | கழிவறையை சுத்தம் செய்ய கூறியதால் மாணவர்கள் போராட்டம்… 

ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர் சந்தேகம் இருப்பதாக கருதி உண்மை தன்மையை அறிய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களை தெரிவித்துள்ளார்.  

இதனால் அங்கிருந்த ராமு உள்ளிட்ட 5 பேரும் அந்த இடத்தை விட்டு சென்று விஜயகுமாரிடம் ரூபாய் 25 லட்சம் தர வேண்டும் இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று ஆயுதங்களைக் கொண்டு மிரட்டி உள்ளனர். 

உயிர் பயத்தால் விஜயகுமார் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டு பணத்தை எடுத்து வருவதாக கூறி சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரனிடம் புகார் அளித்ததுள்ளார்.  

மேலும் படிக்க | 2024ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் – விஜய் வசந்த எம்.பி பேட்டி! 

புகாரின் பேரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, இளையராஜா, மிதுன்சக்கரவர்த்தி ஜான்சன் குமார், ரகுநாத் ஆகிய 5 பேர் மீது நில மோசடி உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மிதுன்சக்கரவர்த்தியை காவல் துறையினர் கைது செய்தனர். மீதமுள்ள நான்கு பேரையும் தேடி வருகின்றனர். 

இளையராஜா, ஜான்சன்குமார், மிதுன் சக்கரவர்த்தி திருச்சி மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் நில மோசடி புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதாக சமயபுரம் காவல் நிலையத்தில்  வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வங்கியை ஏமாற்றி ஒரு கோடியை சுருட்டிய பெண்… வங்கியில் மாட்டியது எப்படி?!! 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »