Press "Enter" to skip to content

ஆஹா.. என்னம்மா குத்தாட்டம் போடுறாங்க.. கொரோனா பீதியில் சீனாவில் இருந்து வந்த இந்திய மாணவர்கள்

டெல்லி: கொரோனா வைரஸ் பீதியால் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்ட இந்திய மாணவர்களுக்கு டெல்லி அருகே தனியாக வைத்து மருததுவ சோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் அனைவரும் இந்தி பாட்டுககு செம்ம குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் இதன் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. ஏனெனில் அங்கிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கிருந்து வர முடியாமல் 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வுகான் நகரில் சிக்கி தவித்தனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

Who would have thought that quarantine could also be fun!#Coronarivus @airindiain https://t.co/NY78kIIixF

— India in Maldives (@EoIMaldives)

February 2, 2020

இதையடுத்து ஏர் இந்தியா விமானத்தில் 15 மருத்துவ அதிகாரிகள் குழுவினர் சீனாவின் வுகான் சென்று இந்திய மாணவர்களை அழைத்து வந்தனர். சீனாவில் இருந்த வந்த மாணவர்கள் அனைவரும் டெல்லி அருகே ஹரியானா மாநிலத்தில் மானசேவரில் ராணுவம் கட்டிய மருத்துவ பரிசோதனை முகாமில் சேர்க்கப்பட்டனர்.

imageவாவ்.. 10 நாளில் 1000 படுக்கைகள்.. ஆஸ்பத்திரி.. கட்டி முடித்து சாதித்தது சீனா! வைரல் வீடியோ

அவர்களை 15 நாட்கள் அங்கு வைத்து தீவிரமாக கண்காணித்து கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்கு பரிசோதனை செய்யப்படும் மாணவர்கள் இந்தி பாடல் ஒன்றுக்கு உற்சாகமாக நடனம் ஆடுகிறார்கள். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மாஸ்க் அணிந்தபடி அவர்கள் படுக்கைகளுக்க அருகே அவர்கள் நடனம் ஆடும் வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் இந்த வீடியோவை பகிர்ந்து தனிமைப்படுத்தலும் வேடிக்கையாக இருக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »