Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஏற்கனவே 969 பேருக்கு நோய்த்தொற்று இருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர்.

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் அதற்கான செலவை அரசே ஏற்கும். தமிழகத்தில் மருத்துவர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »