Press "Enter" to skip to content

ரூ.7500 கோடி மதிப்புள்ள பங்குகளை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய டுவிட்டர் சிஇஓ

கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக தனது சொத்தில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள பங்குகளை டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி வழங்கியுள்ளார்.

நியூயார்க்:

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும், மக்களுக்கு உதவவும் பல்வேறு நோக்கிலும் பல்வேறு நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களை நிவாரண உதவிகளாக வழங்கி வருகின்றன.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி தனது சொத்தில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,98,33,400 ஸ்கொயர் ஈக்விட்டி பங்குகளை லிமிட்டட் லையபிலிட்டி கம்பெனி என்ற நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. 

இந்த பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »