Press "Enter" to skip to content

22 ஆயிரம் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜெனீவா:

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 52 நாடுகளில் 22 ஆயிரத்து 73 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தோ, சமூகத்தில் இருந்தோ பரவி இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சார்பில் ஏற்கனவே சுகாதார ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சுகாதார ஊழியர் களின் பணியிடங்களில் அவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »