Press "Enter" to skip to content

24 லட்சத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – அதிரும் நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது.

ஜெனிவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 24 லட்சத்து 4 ஆயிரத்து 818 பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 849 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 922 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ்  அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:- 

அமெரிக்கா – 7,63,579

ஸ்பெயின் – 1,98,674

இத்தாலி – 1,78,972

பிரான்ஸ் – 1,52,894

ஜெர்மனி – 1,45,184

இங்கிலாந்து – 1,20,067

துருக்கி – 86,306

சீனா – 82,735

ஈரான் – 82,211

ரஷியா – 42,853

பிரேசில் – 38,654

பெல்ஜியம் – 38,496

கனடா – 35,056

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »