Press "Enter" to skip to content

மாநிலம் திரும்பும் நபர்கள் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: புதுச்சேரி, ராஜஸ்தான் நடவடிக்கை

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள், தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி, ராஜஸ்தான் அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே 3-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தினரும் மற்ற மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் சிக்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்காக சென்றவர்கள்.

ஒவ்வொரு மாநிலமும் அவர்களை தங்கள் மாநிலத்திற்கு திரும்ப அழைப்பதற்கு முயற்சிகள் செய்து வருகின்றன. ஒருவேளை அவர்களில் யாருக்காவது கொரோனா இருந்தால் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

இதனால் வெளிமாநிலத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு திரும்பும் நபர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுடைய வீட்டில் தனி அறை இல்லை என்றால், கிராம பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி மாநிலமும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »