Press "Enter" to skip to content

வடசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்?

வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக ராயபுரம் மண்டலம் நோய்த்தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தது. தற்போது திரு.வி.நகரில் அதைவிட அதிக நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகர ஆணையர் கூறியதாவது:

வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது.  சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது.

கொரோனா நோய் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் நிச்சயம் பலன் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறினார்.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 3,75,596 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ரூ.3.64 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »