Press "Enter" to skip to content

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்

அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

சென்னை:

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு இன்று காலை 8.57 மணிக்கு அக்னி நட்சத்திரம் தொடங்கி தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற 28-ம் தேதி பகல் 1.51 மணியோடு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை.

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 24 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Tags :

 அக்னி நட்சத்திரம் பற்றிய செய்திகள் இதுவரை…

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »