Press "Enter" to skip to content

கணக்கில் வராத 1,328 கொரோனா உயிரிழப்புகள் – இறப்பு தரவுகளை மறுகட்டமைப்பு செய்த மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து மாநில கணக்கில் சேர்க்கப்படாத 1,328 இறப்புகள் தற்போது சேர்க்கப்பட்டு தரவுகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ஐ கடந்தது.

மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை குறைத்துக்காட்டப்படுவதாக அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திரபட்னாவிஸ் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வந்தார். 

இதையடுத்து, கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்து மாநில தகவலில் விடுபட்டவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் வைரஸ் தொடர்பான நேற்றைய விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அந்த தகவலின் படி, மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 701 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பில் இருந்து 1,802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாநிலத்தில் கொரோனாவால் ஏற்கனவே உயிரிழந்து மாநில இறப்பு தகவல்கள் பட்டியலில் இடம்பெறாத 1,328 இறப்புக்கள் தற்போது புதிதாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்த மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »