Press "Enter" to skip to content

முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது- ப.சிதம்பரம் பதிலடி

சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டதாகவும், பொதுமக்களுக்கான நிவாரண நிதியை குடும்ப அறக்கட்டளைக்கு திருப்பி விடுவது பெரிய மோசடி என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.  ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் என்ன தவறு?

2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது! 

சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »