Press "Enter" to skip to content

’கடவுள் ராமர் இந்தியர் அல்ல அவர் ஒரு நேபாளி’ – நேபாள பிரதமர் பேச்சு

உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்றும் கடவுள் ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்றும் அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

காத்மண்டு:

இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் தற்போது தன் நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு பிரதமரான கேபி சர்மா ஒலி எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். மேலும், இவர் சீன ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், நேபாளத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. மேலும், நேபாள மக்களிடையே இந்தியா குறித்து எதிர்மறை கருத்துக்களை பிரதமர் கேபி சர்மா ஒலி விதைத்து வருகிறார். 

இந்நிலையில், இந்து மதக்கடவுள்களில் ஒருவரான கடவுள் ராமர் இந்தியர் அல்ல என நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேபாள பிரதமர் கேபி ஒலி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், 

‘உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில் தான் உள்ளது. கடவுள் ராமர் ஒரு நேபாளி அவர் இந்தியர் அல்ல’ என பிரதமர் 

கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »