Press "Enter" to skip to content

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கலாம் – அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க முழு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்:

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை.

அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு நோயாளிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.  

இந்நிலையில், ரெம்டெசிவிர் என்ற நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.

கடந்த மே மாதம் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »