Press "Enter" to skip to content

தடையை மீறி பரப்புரை – 7 மணி நேரத்துக்கு பின் கைதுசெய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார்.

மயிலாடுதுறை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான 100 நாள் பிரசாரத்தை திருக்குவளையில் இருந்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

3-வது நாளாக மயிலாடுதுறையில் உள்ள குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கபட்டார். வேறு இடத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்ததால் 6 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டார். 

அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாளையும் பரப்புரையை தொடருவேன். அமித்ஷா சாலையில் இறங்கி செல்கிறார். கூட்டம் கூடுகிறது. அதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்டால் அது அரசின் நிகழ்ச்சி என்கிறார்கள். 

ஆனால் அந்தக் கூட்டத்தில்தான் அரசியல் பேசி இருக்கிறார்கள். கூட்டணியை அறிவித்துள்ளனர். பா.ஜ.க.வின் அடிமை அரசான அ.தி.மு.க.வின் அராஜகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »