Press "Enter" to skip to content

அதிகரிக்கும் கொரோனா – போர்ச்சுகலில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லிஸ்பன்:

ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் நாட்டில் ஆரம்ப காலத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

ஆனால், போர்ச்சுகலில் கொரோனா வைரசின் அடுத்த அலை பரவத்தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அந்நாட்டில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்,

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகலில் மீண்டும் ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 15) முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என போர்ச்சுகல் பிரதமர் அண்டனியோ காஸ்டா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுளது. அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »