Press "Enter" to skip to content

சென்னையில் 1,327 துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைப்பு

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருப்பவர்கள் அதனை அந்தந்த பகுதி காவல் துறை நிலையங்களில் ஒப்படைக்கும் படி காவல் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

சென்னை:

தமிழகத்தில சட்டசபை தேர்தல் எந்தவித வன்முறை சம்பவங்களும், முறைகேடுகளும் இன்றி அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருப்பவர்கள் அதனை அந்தந்த பகுதி காவல் துறை நிலையங்களில் ஒப்படைக்கும் படி காவல் துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர்.

உரிமம் பெற்று வைத்திருந்த 1,327 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் காவல் துறை நிலையங்களில் ஒப்படைத்து உள்ளனர்.

இதேபோல் கீழ் மகன் (ரவுடி)களுக்கு எதிரான நடவடிக்கைகளும் காவல் துறை கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 கீழ் மகன் (ரவுடி)கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 828 கீழ் மகன் (ரவுடி)கள் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு போலீசாரின் கண்காணிப்பில் இருக்கின்றார்கள்.

ஒரு வாரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிய ஆவணங்கள் இன்றி பணம், பொருட்கள் எடுத்துச் சென்றதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »