Press "Enter" to skip to content

ரஷ்யாவை விடாத கொரோனா – 90 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.42 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் விரும்பத்தக்கதுகோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
 
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் ரஷ்யா தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யா நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.42 லட்சத்து 81 ஆயிரத்து 368 ஆக உள்ளது.

ஒரே நாளில் 336 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 89  ஆயிரத்து 809 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 39.32 லட்சத்தை கடந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »