Press "Enter" to skip to content

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அதிபர் ஜோ பைடன்  புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பேசிய போது ஜோ பைடன் கூறியதாவது:

உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கொரோனா தொற்று போன்றவற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டியது அவசியம். அதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த இதுவரை இல்லாத வகையில் 2 டிரில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்தை துவக்கியுள்ளேன். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திமிக்க நாடாக, அமெரிக்கா தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள், வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரிக்கும். பொருளாதாரமும் மாபெரும் வளர்ச்சி பெறும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க அதிக முதலீடு செய்யப்பட்டது. அதன்பின், தற்போது தான் வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்புக்காக அதிக முதலீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »