Press "Enter" to skip to content

உங்கள் வாக்குச்சாவடி எது என்பது தெரியவில்லையா? உடனே அறிந்துகொள்ளலாம் வாங்க…

வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டதால், சில பகுதிகளில், ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு வாக்குச்சாவடியும், மற்றொருவருக்கு வேறு வாக்குச்சாவடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை:

தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் வாக்காளர்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி விட்டும், வாக்குச்சாவடி மையத்தில் கூட்டம் கூடாமல் வாக்களிப்பதற்காகவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரத்துக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அது 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வாக்குச்சாவடிகளை பிரித்திருப்பதால் பலர் இன்று தங்களின் வாக்குச்சாவடிக்கு சென்று ஏமாற்றமடைந்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர். 

சில பகுதிகளில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு வாக்குச்சாவடியும், மற்றொருவருக்கு வேறு வாக்குச்சாவடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்கள் வாக்குச்சாவடிகள் பற்றிய நிலையை அறியாமல் வாக்களிக்க சென்றதால், அவர்களின் நேரம் விரயமானது. 

எனவே, வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்திருப்பது நல்லது. https://electoralsearch.in/ என்ற இணையதளத்தில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், மாநிலம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் தங்கள் வாக்குச்சாவடி முகவரியை உடனடியாக அறிந்துகொள்ளலாம். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »