Press "Enter" to skip to content

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

கொரோனாவின் மையமாக தலைநகரம் மாறாமல் இருக்க, சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “6 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுத இருக்கிறார்கள். ஒரு லட்சம் ஆசிரியர்களும் பணியில் ஈடுபடுவார்கள். கொரோனாவின் மையமாக தலைநகரம் மாறாமல் இருக்க, சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கரம்கூப்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனைகளுடன், விருந்தினர் விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவற்றை இணைத்து சுகாதார திட்டங்களை செயல்படுத்துகிறோம், லேசான கொரோனா தொற்று கொண்டவர்களை அங்கு வைத்து சிகிச்சை அளிக்கிறோம்.

பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு பிளாஸ்மா தட்டுப்பாடு நிலவுகிறது, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன்” அவர் கூறி உள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 13,500 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »