Press "Enter" to skip to content

பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சென்னை: 

மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்தன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வை மத்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும்.

14417 என்ற தொலைபேசி எண்ணில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

பிளஸ்-2 மதிப்பெண் முக்கியம். அதேநேரம் மாணவர்களின் உடல் நலனும் முக்கியம். 

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »