Press "Enter" to skip to content

தள்ளுவண்டி கடைகள் விற்பனை நேரம் என்ன?- தமிழக அரசு உத்தரவில் தகவல்

அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

சென்னை:

தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ வாங்குதல்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

நியாய விலைக் கடைகள், கல்லெண்ணெய், டீசல் நிரப்பு நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். உணவுக்கான பொட்டலம்கள் சேவை தொடர்ந்து நடைபெறும். காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொட்டலம் சேவைகள் அனுமதிக்கப்படும்.

மின் வணிக சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »