Press "Enter" to skip to content

தூதரை திரும்பப் பெறும் முடிவு துரதிர்ஷ்டவசமானது – பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தேவையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்:

அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் சில தினங்களுக்கு முன் மதியம் கடத்தப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. 

மேலும், ஆப்கன் தூதரின் மகள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, பாகிஸ்தானினில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதர் மற்றும் மூத்த அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைக்கும் ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் தூதர், அவரது குடும்பத்துக்கு தேவையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, தூதர் மற்றும் மூத்த அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது. இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »