Press "Enter" to skip to content

சென்னையில் இன்று கல்லெண்ணெய் விலை 100 ரூபாயை தாண்டியது

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 100.01 ரூபாய், டீசல் லிட்டர் 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

நாடு முழுதும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, கல்லெண்ணெய், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வெளியான அறிவிப்பால் கல்லெண்ணெய் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. 

சென்னையில் நேற்று கல்லெண்ணெய் லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று கல்லெண்ணெய் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »