Press "Enter" to skip to content

கொலை வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் பிணை மனு தள்ளுபடி

டெல்லி சத்ரசல் அரங்கில் நடந்த மோதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் உயிரிழந்ததையடுத்து இந்த வழக்கை காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றினர்.

புதுடெல்லி:

மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து  முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை கடந்த மே மாதம் சொத்து தகராறு காரணமாக சத்ரசல் மைதானத்தில் வைத்து  தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுஷில் குமார் ஜூன் 2-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கூறி சுஷில் குமார் தரப்பில் டெல்லி ரோகிணி கோர்ட்டில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

கொலையான சாகர் தங்கர் சார்பில் வழக்கறிஞர் நிதின் வசிஷ் வாதாடினார். சுஷில் குமார் ஜாமீனில் விடுவிக்கப்படக் கூடாது  என வாதாடினார்.

இந்நிலையில், இந்த பிணை மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் பிணை மனுவை டெல்லி ரோகிணி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »