Press "Enter" to skip to content

14 நாட்கள் நீதிமன்ற காவல்: ஆர்யன் கான் பிணை மனு மீது இன்று விசாரணை

போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். பின்னர் மேலும் 8 பேர் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்ததும் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், என்.சி.பி. காவலை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.

ஆனால் கோர்ட் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் காவலில் அனுப்ப அனுமதி அளிக்கவில்லை. போதுமான நாட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறிய ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் பிணை வழங்க ஆர்யன் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

ஆர்யன் கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது  செய்யப்பட்டார். திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7-ந்தேதி வரை என்.சி.பி. காவல் வழங்கப்பட்டது. இவருடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »