Press "Enter" to skip to content

நேற்றைவிட 16 சதவீதம் அதிகம்… இந்தியாவில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,06,586 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. புதிய பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பைவிட 16 சதவீதம் அதிகம் ஆகும். 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 246 நபர்கள் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 51 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று 19808 நபர்கள் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,06,586 ஆக சரிந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 96,82,20,997 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 35,66,347 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »