Press "Enter" to skip to content

காதல் மனைவிக்கு புதுமையான பரிசு கொடுத்த கணவன்

சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வீட்டிற்குள் இருந்தபடியே இயற்கையைக் கண்டு களிக்கும்வகையில், தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டை பரிசளித்துள்ளார் வோஜின் குசிக்.

போஸ்னியா:

போஸ்னியா எர்செகோவினா நாட்டின் செர்பாக் நகர் அருகில் வசிப்பவர் வோஜின் குசிக் (வயது 72). இவர் தனது மனைவி மீதான அன்பின் அடையாளமாக, அவருக்கு வித்தியாசமான சுழலும் வீட்டைக் கட்டி கொடுத்து அசத்தி உள்ளார். 

சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வீட்டிற்குள் இருந்தபடியே இயற்கையைக் கண்டு களிக்கும்வகையில், தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டை பரிசளித்துள்ளார் வோஜின் குசிக். 

இந்த வீட்டின் சுழலும் வேகத்தை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மிகவும் வேகமாக சுழன்றால்,  22 வினாடிகளில் ஒரு முறை முழுமையாக சுற்றி முடிக்கும். மிகவும் மெதுவான வேகத்தில் சுழன்றால் ஒரு சுழற்சியை முடிக்க 24 மணி நேரம் ஆகும்.

யாருடைய துணையுமின்றி தனி நபராகவே இந்த அழகான வீட்டை 6 வருடங்களில் கட்டியுள்ளார் வோஜின். நிகோலா டெஸ்லா மற்றும் மிஹாஜ்லோ புபின் போன்ற கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்த புதிய முயற்சியில் வீடு கட்டியதாக வோஜின் குசிக் கூறுகிறார்.

வோஜின் குசிக் கட்டியிருக்கும் இந்த சுழலும் வீடு, அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துளள்து. பலர் சுழலும் வீட்டை பார்க்க வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »