Press "Enter" to skip to content

இதுவரை 14 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்-ஜம்முகாஷ்மீர் டிஜிபி தகவல்

என்கவுன்டரின் போது,​​பயங்கரவாதிகள் பொதுமக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்வதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் தெரிவித்துள்ளார்.

குல்காம் :

ஜம்முகாஷ்மீர் மாநிலம் குல்காமில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய மோதலின் போது மூத்த காவலர் ரோஹித் சிப் உயிரிழந்தார். அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ஜம்முகாஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

இந்த ஆண்டு இதுவரை 8 எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்)கள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் உட்பட 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  எங்கள் துணிச்சலான கான்ஸ்டபிள் ரோஹித் சிப்பை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த என்கவுன்டரின் போது, ​​பயங்கரவாதிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாகப் பிடித்து கேடயங்களாகப் பயன்படுத்த முயன்றனர். ஆனால் எங்கள் துணிச்சலான ஜவான்கள் அந்த பொதுமக்களைக் காப்பாற்றினர். 

குடியரசு தின கொண்டாட்டங்களையொட்டி எங்களது வீரர்கள் எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »